இ-அசஸ்மென்ட் திட்டம்- வருமான வரித் தாக்கல் செய்வோருக்கான நற்செய்தி

எல்லா முடிவுகளும், தகவல் பரிமாற்றங்களும் மின்னனுவு மூலம் நடை பெறுவதால் நிர்வாகத் திறனும், சமந்தப்பட்டவரின் தனியுரிமையும் பாது காக்கப் படுகிறது.  

E-assessment Scheme 2019: தேசிய இ.அசஸ்மென்ட் திட்டம்: நாட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இ- அசஸ்மென்ட் திட்டம், 2019 அரசாங்கத்தால் அறிவிக்கபட்டுள்ளது.  இது முதன் முதலில் 2019-20 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதாகும் .

இ-அசஸ்மென்ட் திட்டம் என்றால் என்ன ?

வரி அதிகாரிகள் மற்றும் வரி செலுத்துவோர் இடையேயான தொடர்புகளை முற்றிலுமாக அகற்றுவதற்காக கொண்டுவரப்பட்டதே இந்த இ- அசஸ்மென்ட் திட்டம் . உதாரணமாக, ஒரு நிதியாண்டில் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகளைச் செய்த பின்னும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவார்கள்.  இது போன்ற அனைத்து உரையாடல்களும் இந்த இ-அசஸ்மென்ட் திட்டம் மூலம் மின்னணு முறையில் மாற்றப்பட்டிருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தேசிய இ-அசஸ்மென்ட் மையம் (National e-assessment Centre ), பிராந்திய இ-அசஸ்மென்ட் மையம் (Regional E-assessment centre), ரீவ்யு யூனிட் (Review Unit), வெரிபிகேஷன் யூனிட்(verification Unit ) அல்லது டெக்னிகல் யூனிட்(technical unit) போன்ற  மூன்று அசஸ்மென்ட் யூனிட் அமைப்புகளும் உருவாக்கப்படும்.

தேசிய இ-அசஸ்மென்ட் மையம்  ஒட்டுமொத்த இந்தியர்களின் வரி மதிப்பீடு செய்வதற்கான அதிகார வரம்பு உடையது. உதரணாமாக, தேசிய மையம் வருமான வரி தாக்கல் செய்யாதவரிடம் காரணம் கேட்டு மின்னணுவில் நோட்டிஸ் அனுப்பும். இந்த நோட்டிஸ் கிடைத்தவுடன் சம்ந்தப்பட்டவர்   15 நாட்களுக்குள் மின்னணு மூலமே பதிலளிக்க வேண்டும் (ஏன்… வீடியோ வசிதியும் உண்டு). நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை.

தேசிய இ-அசஸ்மென்ட் மையம் மதிப்பீடு ஆய்வின் முடிவில், அடுத்தக் கட்ட நடவடிக்கயாக,மின்னணு தானியிங்கு மூலம் எந்த பிராந்திய  இ-அசஸ்மென்ட் மையத்துக்கு  அனுப்பி வைக்கும். பின், அசஸ்மென்ட் யூனிட் ( ரீவ்யு , வெரிபிகேஷன் ) தொடங்கப்பட வேண்டிய அபராதம் ( ஏதேனும் இருந்தால்) தொடர்பான விவரங்களை  வரைவு மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து தேசிய இ-அசஸ்மென்ட் சென்டர் அனுப்பி வைக்கும்.

தேசிய இ-அசஸ்மென்ட் மையம் வரைவு மதிப்பீட்டு அறிக்கையை ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். எல்லா முடிவுகளும், தகவல் பரிமாற்றங்களும் மின்னனுவு மூலம் நடை பெறுவதால் நிர்வாகத் திறனும், சமந்தப்பட்டவரின் தனியுரிமையும் பாதுகாக்கப் படுகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close