2013-14 காலகட்டத்தில், பெங்களூருவில் இருந்து ஆறு- ஏழு இளைஞர்களை சிரியா ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பு துணை நின்றதாக பல் மருத்துவர் மற்றும் கணினி நிபுணரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.
தேசிய புலனாய்வு முகமை, கடந்த செப்டம்பர் 19 அன்று, பெங்களூரில் நகரில் வசித்து வந்த பல் மருத்துவர் முஹம்மது தவுகிர் மஹ்மூத் (29) கணினி நிபுணர் ஜுஹைப் ஹமீத் அல்லது ஷகீல் மன்னா (28) ஆகிய இருவரையும் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இருவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பள்ளி நண்பர்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடனான தொடர்புகளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. தவுகீர் மற்றும் ஷிஹாப் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் பள்ளி படிப்பை முடித்ததாகவும் கூறப்படுகிறது .
டெல்லியில் கடந்த மார்ச் மாதம், தேச அமைதிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த கண் மருத்துர் (28 வயது) அப்துர் ரஹ்மான் என்பவரை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி என்.ஐ.ஏ கைது செய்தது. இவரிடம், மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் பெங்களூரில் இருந்து சிரியா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்கள் சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும், அப்துர் ரஹ்மான் 2013-14 காலகட்டத்தில் தவுகீர் மற்றும் ஹமீத் ஆகியோரின் உதவியுடன் சிரியாவுக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக, " கடந்த, அக்டோபர் 7 ம் தேதி பெங்களூரை தளமாகக் கொண்டு இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வணிக ஆய்வாளர் அகமது அப்துல் கேதர்(40) மற்றும் பெங்களூரில் மொத்த அரிசி விற்பனையாளர் இர்பான் நசீர் (33) ஆகியோரை என்ஐஏ கைது செய்தது.
"குற்றம் சாட்டப்பட்ட அஹ்மத் அப்துல் கேதர், இர்பான் நசீர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் தீவிரவாத செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். பெங்களூரில், அப்துர் ரஹ்மான் மற்றும் பல இஸ்லாம் இளைஞர்களை சிரியா ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்ப நன்கொடைகள் வழங்கியதாகவும் என்ஐஏ தெரிவித்தது. இவ்வாறு, அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் சிரியாவில் கொல்லப்பட்டனர் ”என்று என்ஐஏ தெரிவித்தது.
எம்பிஏ பட்டம் பெற்ற பைஸ் மசூத், ஈமன் நாட்டில் பணிபுரிந்து வந்த அப்துல் சுபான் ஆகிய இருவரும் சிரியாவில் கொல்லப்பட்டதையும் என்.ஐ. ஏ உறுதி படுத்தியது .
2013-14 ஆம் ஆண்டில் எலும்பியல் மருத்துவர் மற்றும் வான்வெளிப் பொறியியலாளர் ஆகிய இரண்டு இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றதாக என்ஐஏ மற்றும் பிற முகமைகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடும் சண்டை காரணமாக, இருவரும் சிரியாவில் இருந்த குறுகிய காலத்திற்குள் தாயகம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அந்த கால கட்டத்தில் பெங்களூருவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றதாக தெரிகிறது. இருப்பினும், சிலர் குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கு திரும்பியதாக கருதப்படுகிறது. சிலர் அங்கே இறந்துவிட்டதாகத் தெரிகிறது. தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.