சோம்நாத் சாட்டர்ஜி மறைவிற்கு இரங்கல்கள் தெரிவிக்கும் தேசிய கட்சித் தலைவர்கள்

ஏழைகள் மற்றும் வறுமையில் வசிக்கும் மக்களின் ஒருமித்த குரலாக வெளிப்பட்டவர் என நரேந்திர மோடி புகழாரம்

By: Updated: August 13, 2018, 12:13:41 PM

சோம்நாத் சாட்டர்ஜி மரணம் : நாடாளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து தங்களின் இரங்கல் செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பல தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய இரங்கல் செய்தியினை பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோரும் தங்களின் இரங்கல் செய்தியினை பதிவு செய்துள்ளார்கள்.

யாரிந்த சோம்நாத் சாட்டர்ஜி என்பதை அறிந்து கொள்ள

சோம்நாத் சாட்டர்ஜி மரணம்

சிறுநீரகப் பிரச்சனையால் அவதியுற்று வந்த சோம்நாத் சாட்டர்ஜி தன்னுடைய 89 வயதில், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது வரை 10 முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

2004 – 2009ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி மரணம் – தலைவர்களின் இரங்கல்கள்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜி மரணம் குறித்து பதிவிட்டிருக்கும் இரங்கல் செய்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இரங்கல் செய்தி

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவரஜ் அவர்களின் இரங்கல் செய்தி

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அவரின் இரங்கல் செய்தி

திமுக கட்சி செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

பிஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் இரங்கல் செய்தி

பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரேந்தர் சிங் அவர்களின் இரங்கல் செய்தி

இவர்கள் மட்டும் அல்லாது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாரயணசாமி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர்களும் ட்விட்டரில் தங்களின் வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:National leaders mourn for somnath chatterjee demise

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X