scorecardresearch

நாட்டில் வேலை செய்யும் ஆண்களின் விகிதம் குறைவு – ஷாக் ரிப்போர்ட்

ஆண் தொழிலார்களின் விகிதம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை. 

Male workforce

இந்தியாவில் 1993-94-லிருந்து முதன்முறையாக வேலை செய்யும் ஆண்களின் அளவு சுருங்கியிருக்கிறது.

என்.எஸ்.எஸ்.ஓ 2017-2018-ல் எடுத்த சர்வேயின் படி நாட்டில் 28.6 கோடி ஆண்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

1993-94 ஆம் ஆண்டு என்.எஸ்.எஸ்.ஒ கணக்கெடுப்பு நடத்தியபோது 21.9 கோடி ஆண்கள் பணியிலிருந்தனர். 2011-12-ல் அது 30.4 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் ஆண் தொழிலார்களின் விகிதம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை.

கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2017-18-ம் ஆண்டில் குறைவான ஆண்கள் மட்டுமே வேலை செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

nssoபெயர் கூற விரும்பாத வல்லுநர் ஒருவர் கூறும் போது, “இந்த தரவைப் பற்றி ஆழமான ஆய்வு தேவை. இருப்பினும் வேலை இழப்புகளையும், சில புதிய வேலை வாய்ப்புகளைப் பற்றியும் இத்தரவு தெளிவாக தெரிவித்துள்ளது” என்றார்.

பி.எல்.எஃப்.எஸ்ஸை அடிப்படையாகக் கொண்ட இந்த என்.எஸ்.எஸ்.ஒ ரிப்போர்ட் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை எடுக்கப்பட்டதாகும். தேசிய புள்ளியியல் கமிஷனின் பொறுப்பு சேர்மன் பி.சி.மோகனன், உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி ஜனவரி மாதம் தங்களின் பொறுப்பிலிருந்து விலகினார்கள். அதனால் இதன் முடிவை அரசு இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த ரிப்போர்ட்டுக்கு டிசம்பர் 2018-ல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: National male workforce shrinking in india says nsso report