கங்கை நதியை சுத்தம் செய்யும் மூன்று நாள் திட்டத்தை, ஜல்சக்திக் துறை அமைச்ச் கஜேந்திர சிஹ் ஷெகாவத் நேற்று தொடங்கி வைத்தார். கங்கை தூய்மை தேசிய திட்டத்தின் கீழ் சாதனை முயற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், பெரும்பாலானோர் கலந்துகொண்டு, கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் படங்களில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். அதன்படி, ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் பதிவிடப்பட்டதை கின்னஸ் அமைப்பு உலக சாதனையாக அறிவித்து சான்றிதழை வழங்கியது. கங்கை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யுஜிசி தேடுதல்
பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு புதிய தலைவரை கண்டறியும் பணியில் மத்திய கல்வி அமைச்சகம் களமிறங்கியுள்ளது. அந்த நபர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயதாகும் வரை பதவியில் இருப்பார். 2018 ஜனவரியில் பொறுப்பேற்ற தற்போதைய யுஜிசி தலைவர் பேராசிரியர் டி பி சிங் விரைவில் 65 வயதை எட்ட உள்ளதால், அடுத்த தலைவரை உடனடியாக பணி தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், AICTE தலைவர் பேராசிரியர் அனில் தத்தாத்ரேயா சஹஸ்ரபுதே, UGC மற்றும் AICTE போன்ற தற்போதைய ஒழுங்குமுறை அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய உயர்கல்வி ஆணையத்தை அரசு இந்தாண்டு தொடங்கும் என்று தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பணிகள்
மூன்று முக்கியமான தூதுவர் நியமனத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான தூதராக இருக்கும் 1990-பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான பவன் கபூர், ரஷ்யாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலத்தீவுக்கான தூதராக இருந்த 1993-ம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான சஞ்சய் சுதிர், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் டைரக்டர் ஜெனரலாக இருந்த 1990-ம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான தினேஷ் கே பட்நாயக், ஸ்பெயினுக்கான அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil