இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு : டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்

Delhi Israeli Embassy Bomb Blast : டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே திடீரென நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Israeli Embassy Bomb Blast : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடந்த 26-ந் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக  டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அப்துல்கலாம் சாலையில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பினால், 4 கார்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுவரை யாரும் காயம் மற்றும் பலியானதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வெடித்தது, எந்த மாதிரியான குண்டு என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வரும் நிலையில்,  சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டிராக்டர் பேரணி வன்முறை காரணமாக டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: National news bomb blast near israeli embassy in delhi

Next Story
டிராக்டர் பேரணியில் இறந்தவரின் உடலில் புல்லட் காயங்கள் இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express