தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெறாத 19 லட்சம் பேரின் நிலை என்ன?

இந்த 19 லட்சத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்கள் கவலை கொள்ள வேண்டாம் – அசாம் அமைச்சர்

National Register of Citizens NRC excluded 19 lakhs people
National Register of Citizens NRC excluded 19 lakhs people

Abhishek Saha

National Register of Citizens NRC excluded 19 lakhs people : 3,30,27,661 நபர்களில் 3,11,21,004 நபர்களின் பெயர் அசாம் குடியுரிமை பதிவேட்டில் இடம் பெற்றுள்ளது. 19,06,657 நபர்களின் பெயர்கள் பட்டியல் இடம் பெற்றவில்லை. அவர்களின் நிலை என்ன என்று பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அவர்களுக்கு விடிவுகாலம் வருமா என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக அசாமில் குடியேறியவர்கள் குறித்த இம்முடிவு எடுக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக விண்ணப்ப முறையில் அசாம் குடியுரிமை பதிவேட்டில் பெயர்கள் சேர்க்கும் முறை நடைபெற்று வந்தது. இறுதிகட்ட பட்டியல் சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது.

பாஜக, வரைவில் வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் பாதி நபர்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெறவில்லை என்று ஒரு புறம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. ஆனால் என்.ஆர்.சிக்கு (National Register of Citizens (NRC)) வித்திட்ட காங்கிரஸோ, ஒன்றும் அறியாத அப்பாவி குடிமக்களும் இந்த 19 லட்சம் நபர்களில் அடங்குவார்கள் என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

இறுதி கட்ட வரைவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் 2.89 கோடி மக்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் 40 லட்சம் நபர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனை எதிர்த்து சரியான சான்றிதழ்களை அளித்தனர் 36 லட்சம் பேர். ஆனாலும் முந்தைய பட்டியலில் இடம் பெற்றிருந்த 2.89 கோடி நபர்களில் மேலும் 1.02 லட்சம் நபர்களின் பெயர்களை நீக்கி இந்த ஆண்டின் என்.ஆர்.சி. பட்டியல் வெளியானது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க

என்.ஆர்.சி.யின் அசாம் மாநில கோ-ஆரிடினேட்டர் ப்ரதீக் ஹஜேலா தெரிவிக்கையில் “இந்த பட்டியல் மிகவும் கவனத்துடனும், மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளப்பட்டது” என்று அறிவித்தார். முறையான ஆவணங்கள் சமர்பிக்காதவர்களும் இந்த 19 லட்சம் பேரில் இடம் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். என்.ஆர்.சி. பட்டியல் வெளியானவுடன் நூற்றுக்கணக்கான மக்கள் நேரடியாக என்.ஆர்.சி. அலுவலங்களில் வந்து முற்றுகையிடத் துவங்கினர்.

இந்த அறிவிப்பு வருத்தம் அளிக்கிறது – அசாம் பாஜக

அசாம் மாநிலத்தின் பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ் கௌஹாத்தியில் பேசுகையில், ”இந்த 19 லட்சம் என்ற எண்ணிக்கை மிகவும் வருத்தம் அளிக்கிறது. 1991ம் ஆண்டில் அசாம் முதல்வர் ஹிதேஷ்வர் சாய்க்கா கூறுகையில் சட்டத்திற்கு புறம்பாக 30 லட்சம் வங்கதேச குடிமக்கள் அசாமில் குடியேறியுள்ளனர் என்று குறிப்பிட்டார். அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் ஸ்ரீப்ரகாஷ் ஜெய்ஸ்வால், ராஜ்யசபையில் “50 லட்சம் வங்க மக்கள் அசாமில் குடியேறியுள்ளனர்” என்றார். எச்.டி. தேவகவுடா ஆட்சியில் இந்திரஜித் குப்தா 42 லட்சம் வெளிநாட்டின் அசாமில் புகுந்துள்ளனர் என்று கூறினார். ஆனால் வெறும் 19 லட்சம் நபர்கள் என்ற எண்ணிக்கையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்” என்று கேள்வி எழுப்பினார்.

மறு பரிசீலனை

இந்த மண்ணில் பிறந்தவர்கள் சிலரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 2 லட்சத்தை தாண்டாது. 1971ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களுக்கான ஆவணங்களை சரியாக ஹஜேலா பின்பற்றவில்லை. இதனால் தான் சில இந்தியர்களின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அசாம் அமைச்சர் மற்றும் அரசின் செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் பத்தோவரி கூறுகையில், “இந்த பட்டியல் உருவாக்கும் பணி மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனாலும் அதில் சில இந்தியர்களின் பெயர்கள் இடம் பெறாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அதனால் தான் நாங்கள் மீண்டும் மறுபரிசீலனை தேவை என்று கேட்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் ஹஜேலா தரப்பு கூறிய ஸ்டேட்மெண்டை பார்வையிட்டு வருகிறது. அந்த அறிக்கையில் 27% மறுபரீசிலனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 19 லட்சத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் சந்திர மோகன் அறிவித்துள்ளார்.  வங்க மொழி பேசும் இந்துக்களின் இறுதி பெயர்கள் சமயங்களில் பிஸ்வாஸ், சர்கார், மற்றும் சஹா என்று முடியும். அதனாலும் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் மறுபரிசீலனை நிச்சயம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

என்.ஆர்.சி திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

அசாம் பப்ளிக் வொர்க்ஸ் – என்ற என்.ஜி.ஓ தான் இந்த என்.ஆர்.சியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. வெளியான முடிவுகளை நகைக்கும் வகையில் “வெளிநாட்டில் இருந்து இங்கு சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் மக்களை பாதுகாக்க அல்லும் பகலும் அன்றாட உழைத்த அரசியல் சார் நிறுவனங்கள், அரசியல் சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் நன்றி. இந்த ஒரு திட்டத்தைக் கொண்டு இவர்கள் தான் ஆதாயம் அடைகின்றார்கள். ஒருவழியாக வெற்றியும் பெற்றுவிட்டனர்” என்று அந்த அமைப்பின் தலைவர் ஆபிஜீத் ஷர்மா அறிவித்தார்.  இந்த ஒரு பட்டியலை தயார் செய்ய மாநில அரசு கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளது. இதனால் ஆதாயம் அடைந்தவர்கள் இங்கு ஏராளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆல் அசாம் ஸ்டூடன்ஸ் அசோசியேசன் என்ற மாணவர் இயக்கம் இது குறித்து கூறுகையில்  “மத்திய அரசும் மாநில அரசும், பிழைகள் இல்லாத என்.ஆர்.சி என்ற வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளனர். சீராய்வு முறையாக நடைபெறவில்லை. சந்தேகத்திற்கு உரிய வகையில் அசாமில் தங்கியிருக்கும் நபர்கள் குறித்து வரைவிலும் சரி, எஃப்.டியிலும் முறையாக தகவல் அறிவிக்கப்படவில்லை என்று கூறீனார்.

All Assam Minority Students’ Union என்ற மாணவர்கள் இயக்க ஆலோசகர் அஜிஜுர் ரஹ்மான் கூறுகையில், ஒன்றும் அறியாத அப்பாவி இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்துவிதமான சட்ட உதவிகளும் நாங்கள் செய்து தருவோம் என்று கூறினார்.

வங்க மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பாரக் பள்ளத்தாக்கிலும் நிலைமை இன்னும் பதட்டமாகவே உள்ளது. சிட்டிசன்ஸ் ரைட்ஸ் ப்ரொடெக்சன் கமிட்டி தலைவர் சதன் கூறுகையில், நீக்கம் செய்யப்பட்ட 19 லட்சம் நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். ஆனால் தற்போது இவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்கள். அவர்களில் உரிமைகள் பறிக்கப்பட்டால், அவர்களால் வாக்களிக்க இயலுமா என்ற பயம் என்னை சூழ்ந்துள்ளது. அவர்களின் எதிர்காலம் தற்போது எஃப்.டி. கையில் உள்ளது. எங்களுக்கு தெரியும் எஃப்.டி எப்படி வேலை செய்யும் என்று தெரியும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

1951ம் ஆண்டு எடுக்கப்பட்ட அசாம் குடியுரிமைப் பதிவேட்டின் அப்டேட்டட் வெர்ஷன் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆர்.சி. பட்டியல். 1971ம் ஆண்டு வங்கப் போர் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளை அடையாளம் காணும் முயற்சியில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

என்.ஆர்.சிக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 2015ம் தேதி விநியோகம் ஆரம்பமாகி ஆகஸ்ட் 31, 2015ம் தேதி முடிவுற்றது. 68,37,660 விண்ணப்பப் படிவங்கள் மூலம் 3,30,27,661 நபர்கள் இந்த பட்டியலில் தங்களின் பெயர்களை இணைக்க விண்ணப்பித்தனர். இந்த பணிகளை மேற்கொள்ள 52,000 அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: National register of citizens nrc excluded 19 lakhs people

Next Story
இந்திய பொருளாதாரம் பஞ்சர் ஆகிவிட்டது: பிரியங்கா கடும் தாக்குBJP trumpeted of bringing ‘acche din’ but ‘punctured’ the economy Priyanka Gandhi Vadra - 'நல்ல காலம் வரும் என பாஜக மார்தட்டியது; ஆனால் பொருளாதாரம் பஞ்சரானது' - பிரியாங்கா காந்தி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com