Advertisment

தேசம் முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112... 16 மாநிலங்களில் சேவை துவக்கம்!

மிக விரைவில் ஆம்புலன்ஸ் உதவி எண்ணான 108ம் இதில் இணைக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nationwide single emergency response number

Nationwide single emergency response number

Nationwide single emergency response number : தீ விபத்து எங்காவது நடந்துவிட்டால் உடனே ஒரு எண்ணிற்கு அழைக்க வேண்டும். அதனை புகாராக அறிவிக்க காவல்த்துறைக்கு வேறொரு எண்ணில் அழைக்க வேண்டும். விபத்தில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றவும், மருத்துவ உதவி அளிக்கவும் மற்றொரு எண்ணை அழைக்க வேண்டும்.

Advertisment

அவசர உதவிகளுக்கு எத்தனை எண்களில் அழைத்து விவரத்தை தெரிக்க வேண்டும் என்ற எண்ணமே சற்று சலிப்பை உண்டாக்கிவிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே உருவாக்கப்பட்டுள்ளது தேசம் முழுவதும் ஒரே அவசர உதவி எண். nationwide single emergency response (NERS).

nationwide single emergency response number

16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரே உதவி எண்ணை மக்கள் பயன்படுத்தும் வண்ணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 112 என்ற அந்த உதவி எண் காவல்துறையின் 100, தீயணைப்புத்துறை 101, மற்றும் பெண்களுக்கான உதவி எண் 1090 ஆகிய எண்களை ஒன்றிணைத்து இந்த புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் ஆம்புலன்ஸ் உதவி எண்ணான 108ம் இதில் இணைக்கப்படும்.

இந்த அவசர உதவி மையம்/எண்ணை அறிமுகம் செய்துவைத்தார் ராஜ்நாத் சிங். தேசம் முழுவதும் மக்களின் பாதுகாப்பினை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த எண்ணை அறிமுகப் படுத்தியுள்ளோம். அடுத்த ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் இந்த அவசர உதவி மையம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

தற்போதைக்கு ஆந்திரா, உத்திரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான், தாதர் நாகர் ஹாவேலி, டாமன் டையூ, ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அவசர உதவிமையம் ஏற்கனவே ஹிமாச்சல் மற்றும் நாகலாந்து ஆகிய பகுதியில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசர உதவி எண்ணில் இருந்து உதவிகளைப் பெற ஒருவர் நேரடியாக தங்களின் போனில் இருந்து 112 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது மூன்று முறை பவர் பட்டனை பிரஸ் செய்தால் பேனிக் காலாக மாறி நேரடியாக எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் செண்ட்டருக்கு தகவல் அளிக்கப்பட்டுவிடும். 5 அல்லது 9 என்ற எண்ணை டயல்பேடில் லாங் பிரஸ் செய்தாலும் நேரடியாக உங்களால் அவசர உதவி மையத்தை தொடர்பு கொள்ள இயலும்.

Rajnath Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment