சன்னி அமைச்சரவையில் அதிருப்தி; பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி அடைந்தார்.

Navjot Singh Sidhu resigns Punjab Congress President, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா, அமரீந்தர் சிங், காங்கிரஸ், பஞ்சாப் காங்கிரஸ், congress, Navjot Singh Sidhu resigns, PPCC, Punjab Congress, Congress, Amarinder Singh, charanjit Singh channi

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்த நவ்ஜோத் சிங் சித்து, தனது பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி அடைந்தார்.

பஞ்சாப் மாநில புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட சில நிமிடங்களில், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.

நவ்ஜோத் சிங் சித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்திக்கு அளித்துள்ள தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியிருப்பதாவது: “மனிதனுடைய சரிவு சமரச மூலையில் இருந்து வருகிறது. பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலனுக்கான நிகழ்வுகளில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. எனவே பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரசுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்குவதை சித்து எதிர்த்து வருவதாகவும் பாரம்பரியமாக இந்த இலாகா முதல்வரிடம் இருந்து வருவதாகவும் சித்து வாதிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, காங்கிரஸ் கட்சி ராந்தவாவை முதல்வர் பதவிக்கு பரிசீலித்தபோது அவர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

முதல்வர் பதவிக்கு ரந்தாவாவின் பெயர் முன்மொழியப்பட்டபோது, ​​காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தேர்வுக் குழுவின் தலைவருமான ஹரிஷ் ராவத்தை சந்தித்த ஹோட்டலில் நவ்ஜோத் சிங் சித்து பரபரப்பாக இருந்தார். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்காக அவர் டெல்லி சென்றதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், கட்சி சமரசம் செய்து சன்னியை முதல்வராக அறிவித்தது. அதன் பிறகு, சித்து நடுவில் திரும்பினார்.

சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் ராணா குர்ஜித் சிங் சேர்க்கப்பட்டதாலும், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் குல்ஜித் சிங் நாக்ரா கைவிடப்பட்டதாலும், பொதுப்பணித் துறை விஜய் இந்தர் சிங்லாவிடம் சென்றதாலும் சித்து வருத்தப்பட்டார். கூடுதலாக, ஏபிஎஸ் தியோலை பஞ்சாப் தலைமை வழக்கறிஞராக நியமிப்பதை அவர் எதிர்த்தார்.

அவர் யாரையும் சந்திக்காமல் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு விழாவை விட்டு வெளியேறினார். அப்போதிருந்து, அவர் தனது பாட்டியாலா இல்லத்திலேயே இருப்பதாகக் கூறப்பட்டது. அங்கு அவரை சமாதானப்படுத்த கட்சி அவரது உதவியாளர் பர்கத் சிங்கை அனுப்பியது. திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சித்து ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் கடும் எதிர்ப்பை சந்தித்த சித்து இந்த ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டார்.

நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அமரீந்தர் சிங் செய்த ட்வீட்டில், “நான் உங்களுக்கு அப்போதே சொன்னேன்… அவர் ஒரு நிலையான மனிதர் அல்ல. எல்லையோர மாநிலமான பஞ்சாப் மாநிலத்திற்கு பொருத்தமானவர் அல்ல” என்று கட்சித் தலைமையிடம் வெளிப்படையாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Navjot singh sidhu resigns punjab congress president

Next Story
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்புBharat Bandh Today, Bharat Bandh today farmers protest
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X