Bajrang Dal to Garba, Dandiya organisers to Check Aadhaar cards: நவராத்திரி விழாவில் கர்பா மற்றும் தாண்டியா நிகழ்வுகளில் இந்து அல்லாதவர்களை அடையாளம் காண்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என பஜ்ரங் தளம் வலியுறுத்தியுள்ளது.
நாவராத்திரி கொண்டாட்டத்தில் இந்து அல்லாதவர்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளம் ‘கர்பா’ மற்றும் தாண்டியா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரிடமும், நிகழ்ச்சியில் குற்றவாளிகளைத் தவிர்ப்பதற்காக கலந்துகொள்பவர்களுக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
“நிகழ்ச்சியில் இந்து அல்லாதவர்கள் நுழைவதை அடையாளம் காணவும், இந்த நிகழ்வுகளுக்கு இந்துக்கள் அல்லாதவர்களை பவுன்சர்களாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கௌம் நிகழ்ச்சிக்கு நுழையும் இடத்தில் ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கலை கேட்டுக்கொண்டுள்ளோம்.” என்று அந்த பஜ்ரங் தளம் ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.கைலாஷ் கூறியதை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் கைலாஷ் கூறுகையில், “இந்து அல்லாத சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களின் குழுக்கள் இந்த நிகழ்வுகளுக்குள் நுழைகின்றனர். மேலும், நிகழ்வின் தெய்வீகத்தன்மை குறித்து அவர்களுக்கு அக்கறையும் மரியாதையும் இல்லை என்பதால் அவர்கள் பெரும்பாலும் கர்பா மற்றும் தாண்டியாவில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதைக் காணலாம். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வரும் ஆண்களையும் அவர்கள் தாக்குகிறார்கள்.” என்று கூறினார்.
“நிகழ்ச்சி நடத்து மேலாளர்கள் இந்து அல்லாத பவுன்சர்களை பணியமர்த்துகின்றனர். இது இந்த குற்றவாளிகள் நிகழ்வுகளுக்குள் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணமாகத் தெரிகிறது. நிகழ்வுகளில் யார் நுழைகிறார்கள் என்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு இல்லாதது மற்றொரு பெரிய குறைபாடு” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பிரச்னைகள் ஏற்படுத்துபவர்களைக் கண்காணிக்க பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று பஜ்ரங்தள் தலைவர் கூறியுள்ளார்.
பஜ்ரங்தள் பணியாளர்கள் அணியினர் நிகழ்ச்சி நடக்கும் அரங்குகளில் இருப்பார்கள். ஏதேனும் அது போன்ற வழக்குகள் புகார் அளிக்கப்பட்டால், குற்றவாளிகள் நிகழ்ச்சிகளுக்குள் நுழைவதைத் தடுத்து பஜ்ரங்தளத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அது முழு நிகழ்வுக்கும் இடையூறை விளைவிக்கும்” என்று கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Navratri events garba dandiya bajrangdal demands organisers to check aadhaar to identify non hindus
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு