இந்தியக் கடல் பகுதிக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நுழைந்த சீனக்கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்திய கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியில், கடலோர பாதுகாப்பு குறித்து இந்தியா கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் தீவில் போர்ட்பிளோர் துறைமுகம் அருகே கடல் பகுதிக்குள் சீனக்கப்பல் ஒன்று நுழைந்துள்ளது. இந்தியக் கண்காணிப்பு விமானம் ரோந்துப் பணியின் போது சீன ஆய்வுக் கப்பலைக் கண்டுபிடித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து இந்திய கடற்படை கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய கடற்படைக் கப்பல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து போர்ட்பிளேர் இருந்து சீனக்கப்பல் சென்றது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
இந்நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து இந்திய கடல் பிராந்தியத்தின் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தீவிரமாக இந்தியா கண்காணித்து வருகிறது.
கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், "எங்கள் பிராந்தியத்தில் செயல்படும் எவரும் இந்திய கடற்படைக்கு அறிவிக்க வேண்டும்" என்றார். சீன கடற்படையின் ஆய்வுக் கப்பல் அங்கு வர அனுமதி கோராததால் அப்பகுதியை விட்டு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அட்மிரல் சிங், கடற்படையின் நீண்டகால திட்டம் மூன்று விமானம் தாங்கி கப்பல் வேண்டும் என்றும், 2022 ஆம் ஆண்டில் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் முழுமையாக செயல்படும் என்றும் கூறினார். முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் (ஐஏசி) 2022 க்குள் முழுமையாக செயல்படும் என்றும் மிக் -29 கே ரக விமானங்களைக் கொண்டிருக்கும் என்றும் கடற்படைத் தலைவர் தெரிவித்தார்.