முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கு இருக்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று கார்கில் நாயகன். இந்த பெயர் வாஜ்பாயுக்கு எப்படி வந்தது என்பது நாடு அறிந்த ஒன்று. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாஜ்பாய் புகழ் பாடியதும் இந்த நிகழ்விற்கு பிறகு தான்.
1999 ஆம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஊடுருவினர். இதனை வாஜ்பாஜ் கடுமையாக எதிர்த்தார். அதன்படிடையில் கடுமையான ராணுவ நடவடிக்கையையும் எடுத்தார்.
இந்த போர் தான் ‘கார்கில் போர்’ என்று அழைக்கப்பட்டது. இந்த போருக்கான ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் விஜய்’ எனவும் பெயரிடப்பட்டது. நாடு முழுவதும் கார்கில் போருக்கு ஆதரவு பெருகியது. வாஜ்பாய்க்கு நாட்டு மக்கள் உறுதுணையாக நின்றனர். அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக நின்றன.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான முக்கியப் போராக இது பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை துணிச்சலான ராணுவ நடவடிக்கை மூலம் விரட்டியடுத்து கார்கில் நாயகனாக உருவெடுத்தார் வாஜ்பாய்.
ஆனால் இந்த கார்கில் போர் தொடங்குவதற்கு முன்பு வாஜ்பாய் தான் முதுகில் குற்றப்பட்டதாக மிகுந்த வேதனையடைந்த நிகழ்வு இன்று வரை வரலாற்றில் இருந்து மறையாமல் உள்ளது. கார்கில் போர் தொடங்கியது 1999 ஆம் ஆண்டும் மே மாதம்.
அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, சரியாக 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயி லாகூர் சென்றார்.

அங்கு இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்த நிலையில் தான் கார்கில் ஊடுருவல் நடந்தது. இதை சற்றும் எதிர்ப்பாராத வாஜ்பாஜ் மிகுந்த ஆவேசத்துடன் நவாஸ் ஷெரீப்பை ஃபோனில் தொடர்புக் கொண்டு பாகிஸ்தான் தனது முதுகில் குத்தி விட்டதாக கூறினார்.
இதை கடந்த 2016 ஆண்டு பாகிஸ்தானிம் முசாபராபாத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மோடி நடந்து செல்கிறார், யமுனை கரையில் இறுதி சடங்கு
கார்கில் ஊடுருவல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறிய இந்த கருத்தைக் கேட்டு பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நவாஸ் ஷெரிப் ஒரு பெரிய பதவியில் இருப்பதால், இதுபோன்ற நேரங்களில் அவர் அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தனர்.