அபுஜ்மத் கிராமங்களுக்குள் ஒரு அமைதிப் புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. சத்தீஸ்கரின் நாராயண்பூர், பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவியிருக்கும் மலைப்பாங்கான காடுகள் - நக்சல்களால் பாதிக்கப்பட்ட அபுஜ்மத்தில் உள்ள பல கிராம மக்கள் தங்கள் நெல்லை அரசாங்கத்திற்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அரசு தனது இருப்பை உணர போராடிய ஒரு பிராந்தியத்தில் இது சாதாரண சாதனை அல்ல, மேலும், அரசாங்கத்தால் இன்னும் நிலத்தின் பெரும்பகுதி அளவிடப்படாமல் உள்ளது. இதனால் அதன் குடியிருப்பாளர்கள் பல நலத் திட்டங்களிலிருந்து வெளியேறுகிறார்கள். அபுஜ்மத் கோவாவை விட பரப்பளவில் பெரியது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 3,400 சதுர கிமீ நாராயண்பூர் மாவட்டத்தில் வருகிறது.
அபுஜ்மத்தின் ஒரு பகுதியான நாராயண்பூர் மாவட்டத்தின் ஓர்ச்சா தொகுதியில் உள்ள குருஸ்னர் கிராமம் நிலம் அளவிடப்படாத கிராமங்களில் ஒன்று.
இன்னும், இரண்டு ஆண்டுகளாக, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர் - கடந்த ஆண்டு இந்த பலனை அறுவடை செய்த கிராமத்தைச் சேர்ந்த 130 விவசாயிகளில் 20 பேர்களில் இருந்து இந்த ஆண்டு 50 பேர் ஆக அதிகரித்துள்ள்னர்.
யோகேஷ் உய்கே (23) அந்த அதிர்ஷ்டசாலி விவசாயிகளில் ஒருவர். இந்த ஆண்டு, ஒன்பது குவிண்டால் நெல்லுக்கு கிட்டத்தட்ட ரூ.20,000 சம்பாதித்த இவர், கடந்த ஆண்டு இதே அளவு நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்த ரூ.10,000-ஐ விட இரட்டிப்பாகச் சம்பாதித்துள்ளார். குருஸ்நர் கிராமத் தலைவர் சந்தோஷ் பொடாய் கடந்த ஆண்டு இதே அளவு நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்தபோது ரூ.22,000க்கு மேல் விற்பனை செய்த நிலையில், இப்போது அதே 20 குவிண்டால் அளவு நெல்லை விற்பனை செய்து ரூ.46,000 சம்பாதித்துள்ளார்.
நில அளவீடு செய்யப்படாத நிலையில், மசாஹதி பட்டாக்கள் அல்லது நில உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் 2019-ம் ஆண்டு எடுத்த முடிவு, அளவீடு செய்யப்படாத நிலங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் இதை சாத்தியமாக்கியது. இந்தப் நடைமுறையின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அபுஜ்மத் கிராமங்களுக்குச் சென்று நில உரிமை நிலையைக் கண்டறியச் சென்றனர். அதன் பிறகு அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதுவரை, இப்பகுதியில் உள்ள 170 கிராமங்களில் 7,729 மசாஹத்தி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி பெற்ற விவசாயிகள் பின்னர் விவசாயிகளாகப் பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்வது உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டனர்.
இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று அழைக்கும் அரசாங்க அதிகாரி ஒருவர், அபுஜ்மத்தில் மாவோயிஸ்டுகள் அதிக செறிவாக உள்ளதால் இந்த பிராந்தியத்தின் நிலங்களை அளவீடு செய்து முடிப்பது அரசாங்கத்திற்கு கடினமாக உள்ளது. இது இப்பகுதி நலத் திட்டங்களை இழந்தது.
“நெல் கொள்முதல் உள்ளூர் மக்களுக்கு நலத்திட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவியுள்ளது. அபுஜ்மத் மலைப்பாங்கான நிலப்பரப்பு, இங்கே மாவோயிஸ்டுகளின் இருப்பு காரணமாக எந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்வது கடினம்” என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள 420 கிராமங்களில் 174 கிராமங்களில் மட்டுமே நில அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. 2019-ல் மாவோயிஸ்டுகளால் கொத்வார் (வருவாய்த் துறை ஊழியர்) கொல்லப்பட்ட பிறகு, 2016-ல் தொடங்கிய நில அளவை செய்யும் பணி கணிசமாகக் குறைந்தது. பிப்ரவரி 26-ம் தேதி சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்த 43 வயது பாதுகாப்புப் படை வீரர் ஓர்ச்சா வட்டாரத்தில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.
நிலப் பதிவு ஓ.ஐ.சி-யாக நியமிக்கப்பட்டுள்ள துணை ஆட்சியர் சுமித் கர்க் கூறுகையில், “நில அளவை செய்யப்படாத பெரும்பாலான கிராமங்கள் ஓர்ச்சா தொகுதியில் உள்ளன. 18 கிராமங்களில் நில அளவீடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. 12 கிராமங்களில் அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் (சி.சி.பி) நோடல் அதிகாரி பிரதிக் அவஸ்தி கூறுகையில், “கடந்த ஆண்டு ஓர்ச்சா வட்டாரத்தில் இருந்து 6,000 குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 16,000 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டது. குருஸ்னர், கோகமேட்டா, கிஹ்காட் மற்றும் குண்ட்லா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல கிராம மக்கள் முதல் முறையாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்தனனர். விநியோக மையங்களும் இந்த ஆண்டு 11-ல் இருந்து 16-ஆக அதிகரித்துள்ளது. இப்போது கிராமவாசிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் பலன்களைப் பற்றி அறிந்து கொண்டதால், அபுஜ்மத்தில் புள்ளிவிவரங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2,542 விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 720 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை (20,614.80 குவிண்டால் நெல்) குவிண்டாலுக்கு ரூ. 2,060 என்ற விலையில் ரூ. 4.22 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறினார். இந்த விவசாயிகள் மாநிலத்தின் ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மாநில பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அரிசி உட்பட முக்கிய காரீஃப் பருவ பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.9,000 வழங்குகிறது.
இது குறித்து நாராயண்பூர் மாவட்ட ஆட்சியர் அஜீத் வசந்த் கூறுகையில், அபுஜ்மத் மாநிலத்தில் அரசு திட்டங்களின் பலன்களை அதிக கிராம மக்கள் பெறுவதை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம்.” என்று கூறினார்.
வேளாண்மைத் துறை துணை இயக்குநர் பி.எஸ். பாகேல் கூறுகையில், “பதிவு செய்த விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை தயார் செய்ய முயற்சி செய்து வருகிறோம். இதனால், அவர்கள் உரங்களுக்கான மானியத்தைப் பெறவும், விவசாய நடவடிக்கைகளுக்கு உதவவும் பணம் பெறவும் முடியும். அவர்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் ஃபைசல் பீமா யோஜனாவின் கீழ் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறிது பணம் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.