ஆர்யன் கானை விடுவிக்க பேரம்? சமீர் வான்கடே மீதான லஞ்சம் புகார் குறித்து விசாரணை

இதற்கிடையில், அடையாளம் தெரியாத நபர்கள், பொய்யான வழக்கு ஒன்றில் தன்னை சிக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே மீதான லஞ்சம் புகார் குறித்து விசாரணை நடத்த என்சிபி உத்தரவிட்டுள்ளது. மும்பை சொகுசு கப்பல் போதை வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகனை விடுவிக்க 8 கோடி ரூபாய் சமீர் லஞ்சம் கேட்டதாகவும்,பொது சாட்சியிடம் 10 வெற்று தாளில் என்சிபி அதிகாரிகள் கையெழுத்து வாங்குனதாகவும் எழுந்த புகாரின்பேரில் மும்பைப் போதை பொருள் தடுப்புப்பிரிவு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆர்யன் கானை விடுவிக்க என்சிபி இயக்குநர் பணம் பேரம் நடத்தியதாக தகவல் வெளியானது.

இவ்வழக்கின் பொது சாட்சியான பிரபாகர் சாயில், மற்றொரு சாட்சியான கோசாவியிடம் பணிபுரிபவர். கப்பலில் சோதனை நடந்தபோது இருவரும் அங்கே இருந்துள்ளனர்.

அவர், என்சிபி அலுவலகத்தில் தன்னிடம் வெற்றுதாள்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. மேலும், கோசாவி, டிசோசாவிடம் ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கான் தரப்பிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டது. இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்தது. இதில், ரூ.8 கோடி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு கொடுக்கவேண்டும் என போனில் பேசியதை நான் கேட்டதாக கூறினார். இதுதொடர்பாக மும்பை காவல் ஆணையத்திலும் சாயில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் மும்பை நீதிமன்றத்தில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ” ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கின் சாட்சியான பிரபாகர் சாயில் பிறழ் சாட்சியாகி விட்டார்” என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அடையாளம் தெரியாத நபர்கள், பொய்யான வழக்கு ஒன்றில் தன்னை சிக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் ஆரம்பம் முதலே கருத்து தெரிவித்துவரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், “இந்த அதிகாரி திட்டமிடப்பட்டே இந்த சோதனைக்கு தலைமை தாங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவுக்காக பணியாற்றுகிறார். அவரின் தந்தை தாவூத் வான்கடே எனக் கூறி அதற்கான சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார்.

இந்த சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலே, சமீர் பதில் அறிக்கை கொடுத்துள்ளார். அதில், “எனது தந்தை Dnyandev Kachruji Wankhede புனே மாநில கலால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். எனது தந்தை இந்து. எனது தாயார் சஹிதா முஸ்லீம். நான் இந்திய பாராம்பரியத்தை பின்பற்றும் கூட்டு மதத்தை சேர்ந்த மதச்சார்ப்பற்ற குடும்பம். எனது பாராம்பரியத்தை கண்டு பெருமைப்படுகிறேன்.

ட்விட்டரில் தனது தனிப்பட்ட ஆவணத்தை வெளியிடுவது அவதூறு செயலாகும். மேலும்,எனது குடும்பத்தின் தனியுரிமை பாதிக்கிறது. இது என் தந்தையையும், மறைந்த தாயாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் உள்ளது. இதை கடுமையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.

மும்பை சொகுசு கப்பல் போதை வழக்கில் ரெய்டு செய்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், சமூக வலைதளங்களில் பெரும் விவாதபொருளாக மாறியுள்ளது. இவ்வழக்கில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள கோரிக்கைகள் வலுத்துவருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ncb orders vigilance probe into bribery charges against sameer wankhede

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express