Advertisment

NCERT பாடப் புத்தகத்தில் மாற்றம்; வரலாற்றுத் திரிபு... மோடியின் நவீன பாரத வரலாறு; எதிர்க் கட்சிகள் விமர்சனம்

ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பி.டி கல்லா மற்றும் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு காந்தி, ஆர்.எஸ்.எஸ், கோட்சே குறித்த திருத்தங்களை கண்டித்துள்ளனர். பி.டி கல்லா தனது மாநிலத்தில் உள்ள பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வோம் என்று கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
ncert changes, என்.சி.இ.ஆர்.டி, காந்தி, கோட்சே, ஆர்.எஸ்.எஸ், பாஜக, ncert revisions, ncert deletions, ncert, rss, mahatma gandhi, godse

NCERT பாடப் புத்தகத்தில் மாற்றம்; எதிர்க் கட்சிகள் விமர்சனம்

பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கல்வி அமைச்சர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மகாத்மா காந்தி, அவரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, மற்றும் 1948-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடை உள்ளிட்ட என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் உள்ள முக்கிய நீக்கங்களை விமர்சித்தனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலக் கல்வி அமைச்சர்கள் இந்த நீக்கல்களை உறுதியாக எதிர்த்தாலும், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் உள்ள கல்வி அமைச்சர்கள் என்.சி.இ.ஆர்.டி-யின் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன், முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான என்.சி.இ.ஆர்.டி, கோவிட்-19 தொற்றுநோயை அடுத்து தான் மேற்கொண்ட பாடப்புத்தகத்தை பகுத்தறிவுபடுத்தும் பயிற்சியின் ஒரு பகுதியை நீக்குகிறது என்று கூறியுள்ளது.

“வரலாற்றை மாற்றி எழுதுவது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுடன் சேர்ந்து தொடர்ந்து முயற்சி செய்டு வருகிறது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. 1998-99-ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கங்களில்கூட, இந்த குறிப்பிட்ட திட்டம் வெளியிடப்பட்டது என்பதை நான் நினைவுபடுத்துகிறேன். ஆனால், நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் வரலாற்றைத் திரிக்கலாம், ஆனால், அதை அழிக்க முடியாது. உண்மை தன்னை வெளிப்படுத்தும் வழியைக் கொண்டுள்ளது. இறுதியில், வரலாற்றை மாற்றி எழுத முயற்சித்தவர்கள் உண்மையில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதற்கு வரலாறு சாட்சியமளிக்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்: “வெள்ளையடித்து மறைத்தல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்யசபா எம்.பி.க்கள் கபில் சிபல் மற்றும் மனோஜ் குமார் ஜா ஆகியோரும் ட்விட்டரில் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து விமர்சித்தனர். இந்த நீக்கங்கள் “மோடிஜியின் பாரதத்துடன் ஒத்துப்போகின்றன - நவீன இந்திய வரலாறு 2014 முதல் தொடங்க வேண்டும்” என்று கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் குமார் ஜா, இந்த விஷயத்தில் ஒரு பதிவை மறு ட்வீட் செய்து, “இதுபோன்ற 'நினைவு அழிப்புகளால் வரலாற்றை அழிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறினார்.

கபில் சிபலின் ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “பா.ஜ.க உங்கள் தவறுகளை மட்டுமே சரிசெய்கிறது” என்று பதிவிட்டுள்ளார், “காங்கிரஸை அச்சுறுத்தும் உண்மைகள் பாடப்புத்தகங்களில் வரவே இல்லை. முகலாயர்களின் காட்டுமிராண்டித்தனம், நெருக்கடி கால சகாப்தம், காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்களின் இனப்படுகொலை மற்றும் காங்கிரஸின் ஊழல் என்று அவர் பட்டியலிட்டார்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பி.டி.கல்லா கூறியதாவது: வரலாற்றை திரிக்கக் கூடாது. மகாத்மா காந்தி நமது தேசத்தின் தந்தை. அவரது மரணம் தொடர்பான உண்மைகள் அப்படியே முன்வைக்கப்பட வேண்டும், சிதைத்த பிறகு முன்வைக்கக் கூடாது. ராஜஸ்தான் பள்ளிகளில் சில வகுப்புகளுக்கு, என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய புத்தகங்களை ஆய்வு செய்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுப்போம்” என்றார்.

மேற்கு வங்க கல்வி ஆமைச்சர் பிரத்யா பாசு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் அரசாங்கம் வரலாற்றின் எந்தவொரு திருத்தலுக்கும் எதிரானது என்றார். “என் கருத்துப்படி, ஒருவரின் செயல்பாடுகளை அல்லது கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை நீக்குவது, அடிப்படையில் உண்மையான கதையை வரலாற்றின் வடிவில் கூறுவதற்கான உண்மையான ஆவியிலிருந்து ஒரு விலகல் ஆகும். வரலாற்றில் எந்த திருத்தல்வாதத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்,” என்றார்.

ஒடிசாவின் பள்ளி மற்றும் கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ், என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்யுமாறு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். பெரும்பாலான மாநிலங்களைப் போலவே, ஒடிசா அரசாங்கத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை SCERT தயாரிக்கிறது. ஒடிசாவில் உள்ள பி.ஜே.டி அரசு, செய்யப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்வதற்கும், என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய பரிந்துரைப்பதற்கும் ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது என்று தாஷ் கூறினார்.

கேரள கல்வி அமைச்சரும் சிபிஐ(எம்) தலைவருமான வி. சிவன்குட்டி, வரலாற்றை திரிக்கும் வகையில் முன்வைக்கும் மத்திய அரசின் முயற்சியை மாநில அரசு ஏற்காது என்றார். “குறுகிய அரசியல் அணுகுமுறையுடன் பாடநூல் தயாரிப்பதை கல்வி ரீதியாக நியாயப்படுத்த முடியாது” என்று அமைச்சர் வி. சிவன்குட்டி கூறினார்.

தெலங்கானா (பி.ஆர்.எஸ்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (ஒய்.எஸ்.ஆர்-சி.பி), பி சபிதா ரெட்டி மற்றும் போட்சா சத்யநாராயணா ஆகிய கல்வி அமைச்சர்கள் தங்கள் மாநில கல்வி வாரியங்கள் முதலில் மாற்றங்களை ஆராய்ந்து பின்னர் இவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று கூறினர்.

காந்தியின் படுகொலையில் நீக்கப்பட்டவை பற்றி குறிப்பாகக் கேட்கப்பட்டதற்கு, தெலங்கானா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு “அது ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து, முகலாயர் பகுதிகளைக் கைவிடுவது உட்பட முடிவு செய்யும்” என்று பி. சபிதா ரெட்டி கூறினார்.

“மாநில வாரியம் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தும் போது, கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் இணைக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் விருப்பம் உள்ளது. இந்த கல்வியாண்டில் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைக்கும் எந்த மாற்றங்களுக்கும் இது பொருந்தும்” என்று சத்யநாராயணா கூறினார்.

பீகார் நிதியமைச்சர் விஜய் குமார் சௌத்ரி கூறுகையில், “வரலாற்றை சிதைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா ட்வீட்டில், என்.சி.இ.ஆர்.டி பகுத்தறிவு மற்றும் உண்மை ஒழிப்புக்கான தேசிய கவுன்சில் போல் செயல்படுகிறது என்று கூறினார்.

“இந்த நாட்களில் உண்மையை யாராலும் திரிக்க முடியாது” என்று கூறிய தி.மு.க எம்.பி கனிமொழி, “மாணவர்களுக்கு என்ன விலை கொடுத்தாலும் உண்மை சொல்லப்படும்” என்று கூறினர். “அவர்கள் திரும்பிச் சென்று வரலாற்றை அவர்கள் விரும்பும் வழியில் மாற்ற விரும்புவது பயமாக இருக்கிறது. பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, தொல்லியல் துறையிலும் மற்றும் பல துறைகளிலும் கூட, புதிய நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கி மக்களின் மனதை கெடுக்க முயற்சி செய்து, விஷயங்களை பாரபட்சமாக ஆக்குகின்றனர்” என்றார்.

தி.மு.க தலைவரும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன், “காந்தி கொலையில் அதற்கு சம்பந்தமில்லை என்று ஆர்.எஸ்.எஸ்-ஐ ஒரு நல்ல அமைப்பாக முன்னிறுத்துவதற்கான முயற்சியே இந்த நீக்கங்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவின் தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் கேங் கூறுகையில், “என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் உள்ள உள்ளடக்கத்தை நீக்குவது எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டது. இந்த அரசாங்கம் நாதுராம் கோட்சேவை தேசத்தின் தந்தையாக சித்தரிக்க விரும்புகிறது, மகாத்மா காந்தியை அல்ல” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Gandhi Rss Nathuram Godse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment