கட்டுரையாளர்: ரௌனக் சரஸ்வத்
3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்புடன் (NCF) “பள்ளி பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள்” ஆகியவற்றை சீரமைப்பதற்காக 19 பேர் கொண்ட குழுவை அமைத்து புதிய பாடப்புத்தகங்களை உருவாக்கும் இறுதி கட்டத்தை பள்ளிக் கல்விக்கான நாட்டின் உச்ச ஆலோசனைக் குழு தொடங்கியுள்ளது.
பீல்ட்ஸ் பதக்கம் வென்ற மஞ்சுல் பார்கவா, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய், ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த சம்ஸ்கிருத பாரதியின் நிறுவன உறுப்பினர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, கல்வியாளர் சுதா மூர்த்தி மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
என்.சி.இ.ஆர்.டி.,யின் (NCERT) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உத்தரவின்படி, இந்தக் குழு 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளின் பாடப்புத்தகங்களையும் மறுஆய்வு செய்து பின்வரும் தரங்களுக்கு சீரான மாற்றத்தை உறுதி செய்யும். இந்தக் குழுவுக்கு தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் (NIEPA) அதிபர் எம்.சி. பந்த் தலைமை தாங்குவார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மஞ்சுல் பார்கவா அதன் இணைத் தலைவராக இருப்பார்.
முன் வரைவு NCF, கருத்துக்காக ஏப்ரல் 6 ஆம் தேதி பொது களத்தில் பகிரப்பட்டது, பள்ளிக் கல்வியின் பெரிய மறுசீரமைப்பான இந்த வரைவு, ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை பரிந்துரைத்தல், 12 ஆம் வகுப்பிற்கான செமஸ்டர் முறை மற்றும் மாணவர்கள் மனிதநேயம், மற்றும் வணிகவியல் பாடங்கள், மற்றவற்றுடன் அறிவியலின் கலவையைத் தொடர சுதந்திரம் ஆகியவற்றை பரிந்துரைத்தது. இறுதி அறிக்கை பொதுவில் வெளியிடப்படவில்லை.
பிபேக் டெப்ராய் தவிர, EAC இன் குழுவில் சேர்க்கப்பட்ட மற்றொரு நபர் பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் ஆவார். மற்ற உறுப்பினர்களில் முன்னாள் தலைமை தேசிய பூப்பந்து பயிற்சியாளர் யு விமல் குமார்; எம்.டி ஸ்ரீனிவாஸ், கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர்; சேகர் மாண்டே, CSIR இன் முன்னாள் டைரக்டர் ஜெனரல் மற்றும் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர்; சுரினா ரஞ்சன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் ஹரியானா பொது நிர்வாகக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல்; மற்றும் பிரெஞ்சு எழுத்தாளரும் ஐ.ஐ.டி காந்திநகர் பேராசிரியருமான மைக்கேல் டானினோ ஆகியோர் அடங்குவர். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கணிதம் கற்பிக்கும் சுஜாதா ராமதுரை குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றொரு பேராசிரியர்.
இந்த குழுவில் NCERT யின் நான்கு உறுப்பினர்களும் உள்ளனர்: பிரத்யுஷா குமார் மண்டலா, தினேஷ் குமார், கிர்த்தி கபூர் மற்றும் ரஞ்சனா அரோரா. சிக்கிம், எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குநர் ரபின் சேத்ரியும் இதில் ஒரு அங்கம்.
மஞ்சுல் பார்கவா மற்றும் மைக்கேல் டானினோ NCF-ஐ உருவாக்கிய தேசிய வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழுவிற்கு விஞ்ஞானி கே கஸ்தூரிரங்கன் தலைமை தாங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil