/indian-express-tamil/media/media_files/2025/08/27/nclat-sharad-k-sharma-1-2025-08-27-09-12-23.jpg)
ஆகஸ்ட் 13-ம் தேதியிட்ட தனது உத்தரவில், “நம்மிடம் உள்ள ஒருவரான உறுப்பினர் (நீதித்துறை), ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்குமாறு, இந்த நாட்டின் உயர் நீதித்துறையைச் சேர்ந்த மிகவும் மதிக்கப்படும் ஒருவரால் அணுகப்பட்டுள்ளார் என்பதைக் கவனித்து நாங்கள் வேதனை அடைகிறோம்” என்று நீதிபதி ஷரத் குமார் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். Photograph: (Credit: NCLAT)
முன்னெப்போதும் இல்லாத உத்தரவில், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (என்.சி.எல்.ஏ.டி - NCLAT) ஒரு நீதித்துறை உறுப்பினர், “இந்த நாட்டின் உயர் நீதித்துறையைச் சேர்ந்த மிகவும் மதிக்கப்படும் ஒருவரால்” இந்த வழக்கில் தலையிட முயற்சி நடந்துள்ளதாக ஒரு உத்தரவில் பதிவுசெய்த பின்னர், வழக்கிலிருந்து விலகியுள்ளார்.
“நம்மிடம் உள்ள ஒருவரான உறுப்பினர் (நீதித்துறை), ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்குமாறு, இந்த நாட்டின் உயர் நீதித்துறையைச் சேர்ந்த மிகவும் மதிக்கப்படும் ஒருவரால் அணுகப்பட்டுள்ளார் என்பதைக் கவனித்து நாங்கள் வேதனை அடைகிறோம். எனவே, இந்த வழக்கை நான் விசாரிக்க மறுக்கிறேன்,” என்று நீதிபதி ஷரத் குமார் ஷர்மா தனது ஆகஸ்ட் 13 தேதியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு ஜூன் 18 அன்று தீர்ப்புக்காக ஒதுக்கப்பட்டது, மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒரு வாரத்திற்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமான கே.எல்.எஸ்.ஆர் இன்ஃப்ராடெக் லிமிடெட்-க்கு எதிரான திவால் நடவடிக்கைகளை இந்த விசித்திரமான வழக்கு உள்ளடக்கியுள்ளது.
ஒரு கடனாளியான ஏ.எஸ். மெட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்-ஐ அதற்கு எதிரான கார்ப்பரேட் திவால் தீர்வு செயல்முறையை (சி.ஐ.ஆர்.பி. - CIRP) தொடங்க அனுமதித்த தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் பெஞ்சின் முடிவுக்கு எதிராக இந்த இன்ஃப்ரா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, ஏ.எஸ். மெட் கார்ப்பரேஷன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டியுடன் ரூ.2,88,79,417 நிலுவைத் தொகை கே.எல்.எஸ்.ஆர் இன்ஃப்ராடெக்-கால் செலுத்தப்படாமல் உள்ளது என்று குற்றம் சாட்டியது. திவால் மற்றும் வங்கிக் குறியீட்டின்படி, ஒரு செயல்பாட்டு கடனாளி (ஒரு நிறுவனத்திற்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குபவர்) ஒரு கடனை செலுத்தத் தவறியிருந்தால், அந்த கடனின் இருப்பு குறித்து எந்தவொரு சர்ச்சையும் இல்லை என்றால், திவால் நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.
நிறுவனக் கடனாளியான கே.எல்.எஸ்.ஆர் இன்ஃப்ரா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிவரும் ஒரு லாபகரமான நிறுவனம் என்றும், அதனால் அது திவாலாகவில்லை என்றும் வாதிட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 30, 2022 அன்று, கடனாளியின் இயக்குநர்களுக்கு எதிராக தவறான நடத்தை குற்றச்சாட்டுகளைக் கூறி முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இயக்குநர்கள் தலைமறைவாக உள்ளனர் என்றும் அது கூறியது. குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால், தரப்பினரிடையே சர்ச்சைகள் நிலுவையில் உள்ளன என்றும், எனவே திவால் நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.
கடனாளி தரப்பு, கோரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றும், எனவே அது முன்பே இருந்த சர்ச்சையாக இருக்க முடியாது என்றும் பதிலளித்தது. மேலும், இயக்குநர்கள் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், அவர்கள் தலைமறைவாக இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஒரு மனுவும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அது தெளிவுபடுத்தியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட என்.சி.எல்.டி, திவால் நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதித்தது. இந்த முடிவு மேல்முறையீட்டு அமைப்பில் சவால் செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.