மகாராஷ்டிர அரசியலின் மாறிவரும் காட்சிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் செல்வாக்கு சரிவு, அதன் மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி கட்சியான என்.சி.பி-க்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. 2022-ல் சிவசேனா பிளவுபட்டு உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவியை பறித்தது மட்டுமில்லாமல், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் எண்ணிக்கையில் உத்தவ்வின் கட்சியை நான்காவது இடத்திற்கு தள்ளியது. எதிர்க்கட்சித் தலைவராக உத்தவ் பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாபதவியேற்கும் வாய்ப்பையும் இழந்தது. அதற்கு பதிலாக என்.சி.பி-க்கு எதிர்க்கட்சியாக பதவி ஏற்கும் வாய்ப்பு சென்றுள்ளதால் அஜித் பவார் அதில் ஆர்வத்துடன் உள்ளார்.
இப்போது, தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனாவாக அங்கீகரித்து, சிவசேனாவின் வில் மற்றும் அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதித்துள்ளதால், உத்தவ் தாக்கரே அணி வருத்தத்தில் மூழ்கியுள்ளனர். காங்கிரஸ் என்.சி.பி மற்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா (யு.பி.டி) ஆகியவை ஒற்றுமையாக இருக்கவும், மகா விகாஸ் அகாதி கூட்டணியின்கீழ் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டாகப் போட்டியிடவும் உறுதியளித்திருந்தாலும், பெயர் மற்றும் சின்னம் இழப்பு உத்தவ் கட்சியின் விரிவாக்கத் திட்டங்களைத் தடுத்திருக்கிறது.
அனைத்துக் கட்சிகளும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்று மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளில் ஷரத் பவார் தலைமையிலான என்.சி.பி, கட்சி வியூகம் மற்றும் திட்டங்களில் காங்கிரஸ் மற்றும் உத்தவ் சேனா இரண்டையும்விட முன்னணியில் உள்ளது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதற்காக வாராந்திர நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள என்.சி.பி தொண்டர்களுக்கு ஒவ்வொரு வார இறுதியில் என்.சி.பி பணிகளுக்காக குறைந்தபட்சம் சில மணிநேரம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராமப்புற விவசாயம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க சரத் பவார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இளம் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ரோஹித் பவார் ஜென்நெக்ஸ்டைத் தட்டிக் கேட்க விவாதிக்கும் அமர்வுகளை நடத்துகிறார். லோபி அஜித் பவார் ஆளும் பா.ஜ.க-ஷிண்டே சிவசேனா மீது சட்டமன்றத்திலும் வழக்கமான பொதுக்கூட்டங்களிலும் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்துகிறார்.
ஆனால், என்.சி.பி தலைவர்கள் கவனமாக நடக்க வேண்டும் என்பது தெரியும். எனவே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் பிறகு அவர்கள் தங்கள் அறிக்கைகளில் எச்சரிக்கையாக உள்ளனர். மூத்த பவார் “இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. காங்கிரஸின் தேர்தல் சின்னமான ‘பசுவும் கன்றும்’ என்பதில் இருந்து ‘கை’ என மாற்றப்பட்டபோதும் இதேபோன்ற சிக்கலை இந்திரா காந்தி எதிர்கொண்டார். ஆனால், மக்கள் புதிய சின்னத்தை ஏற்றுக்கொண்டனர். தாக்கரேவுக்கும் அதுவே நடக்கும். அஜித் பவார் கூட ஆச்சரியப்பட்டார். “முடிவெடுப்பதில் தேர்தல் ஆணையத்தின் அவசரம் என்ன? பால்தாக்கரே சிவசேனாவை நிறுவினார் என்பது அனைவருக்கும் தெரியும். உத்தவ் சைனிக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வார்.” என்று கூறினார்.
சிவசேனா பிளவு காரணமாக காலியான இடத்தில் தனது ஆதரவு தளத்தை பலப்படுத்த உத்தவ் ஆதரவு அனுதாபத்தை பயன்படுத்திக் கொள்ள என்.சி.பி இரு முனை உத்தியில் செயல்படும். மாநில என்.சி.பி தலைவர் ஜெயந்த் பாட்டீல், மாநில சட்டமன்றத்தில் 100 இடங்களை எட்டுவது கட்சியின் இலக்கு குறித்து அடிக்கடி பொதுவெளியில் பேசியுள்ளார். முதல்வர் பதவியை வெல்வதற்கு, பாஜக-ஷிண்டே சிவசேனா தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் போராடுவது மட்டுமின்றி, மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் தலைமை தாங்க வேண்டும் என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது. காங்கிரஸ் மாநிலத்தில் அதிகார மோதலில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையில், தாக்கரே தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மேற்கு மகாராஷ்டிராவில் அதன் கோட்டையைத் தாண்டி மராத்வாடா மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் ஆழமாக ஊடுருவுவதற்கு என்.சி.பி-க்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
சரத் பவார் காங்கிரஸை விட்டு வெளியேறியபோது என்.சி.பி தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே அது 1999 சட்டமன்றத் தேர்தலில் 58 இடங்கள் மற்றும் 22.6 சதவீத வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் 75 இடங்கள் மற்றும் 27.2 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது. 69 இடங்கள் மற்றும் நூற்றுக்கு 17.33% வாக்குகள் என்று அப்போது ஒன்றாக இருந்த சிவசேனா 3வது இடத்தையும், பா.ஜ.க 56 இடங்களையும், நூற்றுக்கு 14.54 வாக்குகளைப் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தது.
இருபாதாண்டுகளில் இந்த கட்சிகளின் பாத்திரம் தலைகீழாக மாறிவிட்டன. இப்போது பா.ஜ.க. 2019 சட்டமன்றத் தேர்தலில், 25.75% வாக்குகளுடன் 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் (16.41% வாக்குகள்), என்.சி.பி 54 (16.71% வாக்குகள்) மற்றும் காங்கிரஸ் 44 இடங்களையும் (15.87% வாக்குகள்) பெற்றது. 1999-ல் என்.சி.பி தொடங்கப்பட்டபோது, என்.சி.பி-யின் அரசியல் நிர்வாகிகளின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, சிவசேனாவின் வாக்குப் பங்கு எப்போதும் 18 சதவீதத்தைத் தாண்டவில்லை. குறிப்பாக மராத்வாடாவில் வாக்கு சதவீதம் தாண்டவில்லை.
ஜனவரி 14, 1994-ல் சரத் பவார் காங்கிரஸிலும் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோதும் எடுத்த முடிவால் அது ஓரளவு நடக்கவில்லை. தலித்துகளின் நலனுக்காக போராடிய அவர், மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயரை வைக்க முடிவு செய்தார். மராட்டியர்களின் ஒரு பகுதியினர் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை. அப்போதைய போராட்டக்காரர்கள் சிவசேனாவுடன் இணைந்தனர். பால்தாக்கரே கட்சியின் கூர்மையான எழுச்சிக்கு அடங்கிப் போனார்கள்.
அந்த வருத்தம் என்சிபியிடம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், அஜித் பவார், காங்கிரஸுக்கு என்.சி.பி எப்போதும் இரண்டாவது இடம் அளிக்க வேண்டும் என்று கூறி, “2004ல், என்.சி.பி-க்கு 71 இடங்கள் இருந்தன. இது காங்கிரஸைவிட 69 இடங்கள் அதிகம். ஆனாலும், எங்கள் மூத்த தலைவர்கள் காங்கிரஸுக்கு முதல்வர் பதவி கொடுத்தார்கள். அது தவறு என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.
ஆனால் இப்போது, தேர்தல் ஆணையத்தின் முடிவால் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா ஒரு மூலையில் தள்ளப்பட்டுள்ள நிலையில், பிளவுபடாத சிவசேனாவின் 17-18 சதவீத வாக்குகள் கைப்பற்றப்பட உள்ளன. 55-60 இடங்களில் சிவசேனா கடந்த 20 ஆண்டுகளாக என்.சி.பி-யுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இறுதியாக, என்.சி.பி தனது தேர்தல் வாய்ப்பை அதிகரிக்க இந்தத் தொகுதிகளில் கடுமையாகத் போராடும் என்று நம்பலாம்.
என்.சி.பி-யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால், எங்களுடைய கட்சியின் கிராமப்புற அடித்தளம் அப்படியே உள்ளது. கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஜில்லா பரிஷத்களில் பா.ஜ.க-வை நாங்கள் தோற்கடித்து இருக்கிறோம். தற்போதுள்ள எங்கள் கட்சியின் 56 இடங்கள் என்ற எண்ணிக்கையை 90-க்கு மேல் அதிகரிப்பதே எங்களின் சவாலாக உள்ளது. மகாராஷ்டிராவின் பல பதிற்றாண்டுகளாக பிளவு-தீர்ப்புகள் மற்றும் கூட்டணி அரசாங்கங்களின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, 90-100 இடங்களைக் கொண்ட எந்தக் கட்சியும் அரசாங்கத்தை அமைத்து முதல்வர் நாற்காலியைத் தக்கவைக்க வாய்ப்புள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.