மூக்கில் ரத்தம் வடிய பிணமாகக் கிடந்த முன்னாள் முதல்வர் மகன்: கொலை என அறிவிப்பு

ND Tiwari Son Murder: ரோகித் சேகர் திவாரியின் மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Uttar Pradesh, rohit shekhar tiwari, என்.டி.திவாரி மகன் கொலை, nd tiwari
Uttar Pradesh, rohit shekhar tiwari, என்.டி.திவாரி மகன் கொலை, nd tiwari

என்.டி.திவாரி மகன் மரணம், கொலை என தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவராகவும், உ.பி. முதல்வராகவும் இருந்தவர் என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி (வயது 40). ரோகித் சேகர் திவாரி, டெல்லியில் அவரது இல்லத்தில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இறந்து கிடந்தார்.

ரோகித் சேகர் திவாரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், ரோகித் சேகர் திவாரியின் கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.

ரோகித் சேகர் திவாரியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ரோகித் சேகர் திவாரியின் மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணை முடிவில் ரோகித் சேகர் திவாரியின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nd tiwari son murder rohit shekhar tiwari

Next Story
காங்கிரஸ் பிரசார மேடையில் தாக்கப்பட்ட ஹர்திக் படேல்: வீடியோHardik Patel slapped at election rally, ஹர்திக் படேல், குஜராத் காங்கிரஸ் தலைவர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com