”தனியார் மயமாகும் 5 பொதுத்துறை நிறுவனங்கள்” – நிதியமைச்சரின் முழு விளக்கம்!

இந்த நிதியாண்டுக்குள் இந்த பங்கு விற்பனையை செய்ய முடியுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.

By: Updated: November 21, 2019, 09:22:42 AM

 Sunny Verma

NDA government Wednesday decided to privatize three big PSUs :  பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டட் (அசாமின் நுமலிகரா சுத்தகரிப்பு நிலையத்தின் பங்குகள் தவிர்த்து), கார்கோ மோவர் கண்டெய்னெர் கார்பரேசன் ஆஃப் இந்தியா, ஷிப்பிங் கம்பெனி ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டட் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பை நேற்று நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார்.  இவை மட்டுமில்லாமல் டி.எச்.டி.சி நிறுவனத்தில் இருக்கும் 74.23% பங்குகள், நீப்கோவின் 100% பங்குகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பொருளாதார விவாகரங்களுக்கான கமிட்டியின் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்”பொருளாதார கமிட்டி குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறூவனங்களில் இருக்கும் மத்திய அரசின் பங்குகளை 51%-க்கு கீழ் குறைக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால் நிர்வாக கட்டுப்பாட்டினை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் கூறினார்.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நிர்மலா சீதாராமன் அறிவிக்கும் போது ரூ. 1,05,000 கோடி முதலீட்டினை திரும்ப பெறுதல் குறித்து அறிவித்தார். கடந்த நிதியாண்டில் (2018-2019) இந்த இலக்கு ரூ. 80000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நிறுவனங்களின் விற்பனையை மார்ச் மாதம் 31ம் தேதி, 2020ம் ஆண்டுக்குள் முடிப்பது என்பது அரசுக்கு சவாலான காரியமாக இருக்கும் என்று துறைசார் வல்லுநர்கள் அறிவிக்கின்றனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டட் நிறுவனத்தில் அரசு 53.29% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 63.75% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. CONCOR நிறுவனத்தின் 54.8% பங்குகளில் 30.8% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது இந்நிறுவனம். ரயில்வே துறையில் CONCOR நிறுவனத்தின் ஏனைய 24% பங்குகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதால் அந்த பங்குகளை அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசி. ஆனால் நிர்வாகம் முழுவதும் தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுமலிகர் எண்ணெய் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் முறையே மற்றொரு அரசு நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து அதனை பிரித்து வேறொரு அரசு நிறுவனத்துக்கு அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வசூலிக்கும் திட்டத்தை தற்போது தள்ளி வைத்துள்ளது மத்திய அர்சு. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வரும் போது ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் (வட்டியுடன்) கட்டப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க விரும்பும் நிறுவனங்கள் வங்கி உத்திரவாதத்தை சமர்பிக்க வேண்டும். இந்த நிலுவை தொகையை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. இந்த பணத்தினை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தவணை முறையில் திருப்பி செலுத்தலாம்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், அரசாங்கம் மொத்தம் ரூ .1 லட்சம் கோடியை திரட்டக்கூடும் என்று வல்லுநர்கள் அறிவிக்கின்றனர். இந்த நிதிகள் 2020 மார்ச் மாத இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். ஆயினும், இந்த நிதியாண்டுக்குள் இந்த பங்கு விற்பனையை செய்ய முடியுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Nda government wednesday decided to privatize three big psus including bpcl thdc india ltd and neepco

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X