துணைச்செயலாளர்கள் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களை நாடும் மத்திய அரசு!

தேர்வு முறைகள் மற்றும் பணி அமர்த்தல் தொடர்பாக திட்டங்களை வகுத்துத் தருமாறு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அதிகாரிகளுக்கு உத்தரவு

By: Updated: June 12, 2019, 02:34:21 PM

Amitav Ranjan

NDA Plans to hire 400 directors and Deputy Secretary : மத்திய பணியாளர்கள் திட்டத்தின் கீழ் இணைச் செயலாளர்கள் (Joint Secretary (JS) rank) பதவிகளுக்கு மட்டுமன்றி தற்போது துணை செயலாளர்கள் ( Deputy Secretary (DS)) மற்றும் இயக்குநர்களை நியமனம் செய்யவும் தனியார் துறையை நாட உள்ளது மத்திய அரசு.

சுமார் 400 இயக்குநர்களை தேர்வு செய்ய தற்போது மத்திய அரசு தயாராகி வருகின்றது. அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடுகள் ஆகி வருகின்றன. மத்திய பணியாளார் திட்டத்தின் (Central Staffing Scheme) கீழ் இருக்கும் காலியாக இருக்கும் 650 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.  பொதுவாக வருமானவரித்துறை, கஸ்டம்ஸ், ரயில்வே, தொலைத்தொடர்பு, அஞ்சலகம், மற்றும் வணிகம் உட்பட 37 துறைகளில் பணியாற்றும், குடிமைப் பணி தேர்வுகள் எழுதிய அதிகாரிகள் இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் மத்திய அரசின் புதிய கொள்கைகளால் 60% வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் பணியாற்றும் திறமையானவர்களுக்கு வழங்கபட உள்ளது.  மத்திய பணியாளார் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு 650 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் அவை முழுக்க முழுக்க மத்திய செயலக அதிகாரிகளுக்கே வழங்கப்படும். அதில் தனியார் நிர்வாகிகளை பணியில் அமர்த்த முடியாது. அப்படி அமர்த்த வேண்டும் என்றால் மத்திய செயலக சேவை விதிமுறைகள் 2009ல் (Central Secretariat Service Rules of 2009)  மாற்றங்களை கொண்டு வர வேண்டியது இருக்கும்.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அதிகாரிகளிடம், தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்படும் இயக்குநர்களுக்கான தேர்வு முறைகள் மற்றும் பணியில் அமர்த்துதல் தொடர்பாக திட்டங்களை வகுத்துத் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நிதி அயோக் திட்டம்

நிதி அயோக் அமைப்பில் இருக்கும் 516 பணியிடங்களில் 54 பணியிடங்களுக்கு தனியார் அதிகாரிகளை நியமிக்க முடிவு மேற்கொள்ளப்பட்ட வருகிறது. எப்போதும் கன்சல்டண்ட்டுகளை மட்டுமே நியமித்து வந்த நிதிஅயோக் தற்போது குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதியவர்களுக்கு நிகரான தகுதிகள் மற்றும் திறன் கொண்டவர்களை மட்டுமே தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதத்தில் லேட்டரல் எண்ட்ரி வழியாக 10 பணியிடங்களுக்கு தனியார் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான முழுமையான ஆங்கில செய்தியைப் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Nda plans to hire 400 directors and deputy secretary from private sectors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X