பெண்களுக்கு எதிரான குற்றத்தில் முதலிடத்தில் உ.பி; 2021இல் மட்டும் 31 ஆயிரம் புகார்கள்

2020இல் பெறபட்ட 23,722 புகார்களுடன் ஒப்பிடுகையில், 2021இல் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31,000 பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2014 க்குப் பிறகு பதிவான அதிகபட்சமாக எண்ணிக்கை ஆகும். அதிலும், பாதிக்கும் மேலான வழக்குகள், உ.பி.,யில் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2020இல் பெறபட்ட 23,722 புகார்களுடன் ஒப்பிடுகையில், 2021இல் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் தரவுகளின்படி, 30,864 புகார்களில், அதிகபட்சமாக மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையின் கீழ் அதாவது, பெண்களுக்கு உணர்வுப்பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை அடங்கும், வீட்டில் நடக்கும் வன்முறை தொடர்பாக 6,633 வழக்குகளும், வரதட்சணைக் கொடுமை என்ற அடிப்படையில் 4,589 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெண்களுக்கு உணர்வுப்பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்பான அதிக வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் தான் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் 15,828 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் 3,336 ஆகவும், மகாராஷ்டிரத்தில் 1,504, ஹரியாணாவில் 1,460 மற்றும், பிகாரில் 1,456 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக NCW தலைவர் ரேகா ஷர்மா கூறுகையில், ” ஆணையத்தின் செயல்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அதிக புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு உதவ புதிய முயற்சிகளை கையாள ஆணையம் தொடர்ந்து முயற்சிக்கும். பெண்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப்லைன் நம்பரை தொடங்கியுள்ளோம் என்றார்.

என் சி டபிள்யூ தகவலின்படி, ஜூலை முதல் செப்டம்பர் 2021 வரை, ஒவ்வொரு மாதமும் 3,100 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. ஆனால், 3 ஆயிரம் புகார் கடைசியாக 2018 இல் இந்தியாவின் #MeToo இயக்கம் உச்சத்தில் இருந்தபோது தான் பதிவானதாக கூறுகின்றன.

அகஞ்சா ஸ்ரீவாஸ்தவா அறக்கட்டளையின் நிறுவனர் அகஞ்சா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ” பெண்கள் தற்போது துணிவுடன் முன் வருகிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் புகார் கொடுக்க முன்வராமல் இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் துன்புறுத்தவது என்னவென்று தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு தெரியும். புகாரளிக்க முன்வருவது நல்ல விஷ்யம் என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nearly 31k complaints of crimes against women received in 2021

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express