கர்நாடாக காவல்துறை தலைவராக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடாக மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைமை அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி, கர்நாடாக புதிய (இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) (DG&IGP)ஆக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். நீலாமணி நியமனம், அம்மாநில முதல்-மந்திரி சித்ராமையாவால் தேர்வு செய்யப்பட்டது என உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
நீலாமணி என்.ராஜூ சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ரூர்கிவை சேர்ந்தவர் ஆவார். கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சிஐடி பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.
நீலாமணி என்.ராஜூ, 23 ஆண்டுகள் ஐபியில் பணியாற்றியவர். 2016ம் ஆண்டு கர்நாடகாவுக்கு திரும்பினார். நீலாமணி என்.ராஜூவை தலைமை காவல்துறை அதிகாரியாக நியமித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்று கர்நாடாகவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தெர்வித்துள்ளனர்.