நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம்

நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவினர் எழுத முடியாது என்ற விதிமுறைக்கு தடை

By: February 28, 2018, 3:49:51 PM

நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவினர் எழுத முடியாது என்ற விதிமுறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு, மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. இதற்காக தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.

மேலும், நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ கடந்த மாதம் வெளியிட்ட அறிவிக்கையில், பொதுப் பிரிவினருக்கு 25 வயது என்றும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு மாறாக தற்போது வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வு வயது உச்ச வரம்பு தொடர்பான சிபிஎஸ்இ அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம் பொதுப் பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் நுழைவுத் தேர்வை எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 150 நகரங்களில் நீட் பொதுத் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Neet 2018 delhi hc puts cbses eligibility criteria on hold

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X