NEET UG Result 2018: நீட் தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 99.99 ‘பெர்சன்டைல்’ மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றார்.
NEET Result 2018 நீட் தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. தனது அதிகாரபூர்வ இணையதளமான cbseneet.nic.in -ல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிட்டது. NEET Result 2018 அறிய விரும்புகிறவர்கள் cbseneet.nic.in இணையதளத்தில் காணலாம்.
NEET Result 2018: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாக நீட் தேர்வு முடிவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கல்பனா குமாரி என்கிற மாணவி 99.99 ‘பெர்சன்டைல்’ மதிப்பெண்கள் பெற்று NEET UG 2018 தேர்வில் அகில இந்திய அளவில் ( All India Rank 1 in NEET UG 2018) முதலிடம் பெற்றார்.
கல்பனா குமாரி, இயற்பியலில் 171/180, வேதியியலில் 160/180, உயிரியியலில் 360/360 என மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். மொத்தமாக 720-க்கு 691 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.
நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ அதிகாரபூர்வ இணையதளமான cbseneet.nic.in -ல் காணலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைமுறைகளை மேற்கொள்ளும். குறிப்பாக அகில இந்திய கோட்டாவாக ஒவ்வொரு கல்லூரியிலும் 15 சதவிகிதம் மாணவர்கள் இந்த கவுன்சலிங் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.
மீதமுள்ள 85 சதவிகித மாணவர்களை அந்தந்த மாநில கவுன்சலிங் முறைப்படி கல்லூரிகளில் சேர்ப்பார்கள். தேர்வு எழுதிய 13 லட்சத்திற்கும் மேலான மாணவ, மாணவிகளில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 6.3 லட்சம் பேர் பொது வகுப்பினருக்கான பிரிவில் வருகிறார்கள்.
To Read, NEET Result 2018: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! Click Here
Cut-off percentile and score: NEET 2018 Result
UR: 50th percentile (691 – 119) – 634,987 candidates
OBC: 40th percentile (118 – 96) – 54653 candidates
SC: 40th percentile (118 – 96) – 17209 candidates
ST: 40th percentile (118 – 96) – 7446 candidates
UR-PH: 45th percentile (118 – 107) – 205 candidates
OBC-PH: 40th percentile (106 – 96) – 104 candidates
SC-PH: 40th percentile (106 – 96) – 36 candidates
ST-PH: 40th percentile (106-96) – 12 candidates
நீட் தேர்வு எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு மட்டும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.