NEET exam 2019 : 2019ம் ஆண்டின் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடைபெறும்.
NEET exam 2019 : அடுத்த ஆண்டின் நீட் தேர்வு:
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஜுலை மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. அதில் 2019ஆம் ஆண்டின் இந்த தேர்வு முதல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்றும், 2 தேர்வுகளில் மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அது கணக்கில் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.
மேலும் இந்த தேர்வு முழுமையாக ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்பதால் ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் நீட் தேர்வு 2019ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்றும், இத்தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும், ஆன்லைன் மூலம் தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாகவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.