NEET Result 2019 : மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வில் தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழகத்தில் 49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 2018ம் ஆண்டை விட இந்த ஆண்டு 9 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2019ம் ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவிலான தகுதி நுழைவு தேர்வு (நீட்) மே 5ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று ( ஜூன் 5ம் தேதி ) வெளியாகின. மாணவர்கள், இந்த தேர்வுமுடிவை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
நீட் தேர்வை, National Testing Agency தேசிய அளவில் நடத்தியது. இந்த அமைப்பு, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு dress codeயை வகுத்திருந்தது. ஆண், பெண் என இருபிரிவுகளாக dress code வகைப்படுத்தப்பட்டிருந்தது.. நாடுமுழுவதும் ஒரேகட்டமாக இந்த தேர்வு, மே 5ம் தேதி பிற்பகல் 2 முதல் 5 மணிவரை நடைபெற்றது.
Live Blog
NEET exam results 2019 : நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. நீட் தேர்வு, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விபரங்களை இங்கு உடனுக்குடன் காணலாம்
தேசிய முன்னிலை பட்டியலில் முதல் 50 இடங்களில் ராஜஸ்தான், டில்லி, உ.பி., - ம.பி., ஆந்திரா மற்றும் தெலங்கானா மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் இடம்பெறவில்லை
தமிழகத்தை சேர்ந்த பொது பிரிவு மாணவரான கார்வண்ண பிரபு 572 மதிப்பெண்கள் பெற்று தேசிய மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.
என் தாய், தந்தை இருவரும் டாக்டர்கள். டாக்டர் ஆக வேண்டும் என்பது என் லட்சியம். பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இந்த வெற்றியை பெற முடிந்தது. நிறைய மாதிரி தேர்வுகள் எழுதி என்னை தயார்படுத்தினேன். விடுமுறை நாட்களில் பள்ளியில் தங்கி படித்தேன். நீட் தேர்வு எளிதாகதான் இருந்தது. இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்தால் நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
'நீட்' தேர்வில் 2018ம் ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி மதிப்பெண் அளவு அதிகரித்துள்ளது. 2018ல் முன்னேறிய பிரிவினருக்கு 119 ஆக இருந்த தேர்ச்சி மதிப்பெண் இந்த ஆண்டு 134 ஆக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு சலுகை இல்லாத மாற்று திறனாளிகள் பிரிவில் 107 ஆக இருந்த மதிப்பெண் தற்போது 120 ஆக அதிகரித்துள்ளது. மற்ற பிரிவுகளுக்கு 96 ஆக இருந்த தேர்ச்சி மதிப்பெண் இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு முடிவு அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் சார்பில் அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தமிழக மாணவர்களுக்கு மட்டும் மாநில தரவரிசை பட்டியல் வெளியிடும். அதில் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கு தரவரிசை நிர்ணயிக்கப்படும். தமிழக மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புக்கு 3250; சித்தா யுனானி ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு 333 இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.
மாநில வாரியான தேர்ச்சியில் ராஜஸ்தான், டில்லி, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. தென் மாநிலங்களில் புதுச்சேரியின் 48.70 சதவீதத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 48.57 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது
தமிழகத்தில் 1.23 லட்சம் பேர் எழுதியதில் 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018ம் ஆண்டில் 39.56 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 9.01 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி கிடைத்துள்ளது
ரேங்க் - 1 : நலின் காந்தேல்வால் ( ராஜஸ்தான்)
ரேங்க் - 2 : பவிக் பன்சால் ( டில்லி)
ரேங்க் -3 : அக்ஷத் கவுசிக் ( உத்தரபிரதேசம்)
ரேங்க் -4 : சுவஸ்திக் பாட்டியா ( ஹரியானா)
ரேங்க் -5 : அனந்த் ஜெயின் ( உத்தரபிரதேசம்)
ரேங்க் -6 : பாத் சர்தக் ராகவேந்திரா ( மகாராஷ்டிரா)
ரேங்க் -7 : மாதுரி ரெட்டி ( தெலுங்கானா)
ரேங்க் -8 : துருவ் குஷ்வாஹா : ( உத்தரபிரதேசம்)
ரேங்க் -9 : மிஹிர் ராய் ( டில்லி)
ரேங்க் -10 : ராகவ் துபே ( மத்தியபிரதேசம்)
2019ல் நடந்த நீட் தேர்வில், 63,789 OBC பிரிவு மாணவர்களும், 20,009 SC பிரிவு மாணவர்களும், 8,455 ST பிரிவு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். Reserve category மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு 2019ல் 1.8 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. 15லட்சத்து 19 ஆயிரத்து 375 மாணவர்கள் தேர்விற்கு பதிவு செய்திருந்த நிலையில், 14,10,755 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் 92.85 சதவீத மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அதிக மாணவர்கள் தேர்வு எழுதினர்.206745 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 81171 மாணவர்கள் தேர்ச்சி
தமிழ்நாடு, 123078 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 59785 மாணவர்கள் தேர்ச்சி
கேரளா, 110206 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 73385 மாணவர்கள் தேர்ச்சி
கர்நாடகா, 102735 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 64982 மாணவர்கள் தேர்ச்சி
இந்தாண்டு (2019) நடைபெற்ற நீட் தேர்வில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்துள்ளனர். 7,97,042 பேர் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தேசிய அளவில் தேர்ச்சி 56.50 சதவீதம் ஆகும்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். கடந்த மாதம் 5-ம் தேதி நீட் தேர்வு கடும் நிபந்தனைகளுடன் நடைபெற்றது. தமிழகத்தில் 188 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இன்று முடிவு வெளியானது. http://www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை காணலாம்.
நீட் தேர்வு முடிவு வெளியானது. மாலை 4 மணிக்கு மேல் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியானது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.
நீட் தேர்வு முடிவுகளை செல்போனில் தேர்வர்களுக்கு அனுப்பும் வசதியை செய்திருந்தால், இணையதளங்கள் முடங்கி தேர்வர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு இப்படி செல்போனில் ரிசல்ட் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு ( Answer key) வெளியிடப்பட்டுள்ளது.
விடைக்குறிப்பு, www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Neet cut off : 2019-20 மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்வந்துள்ளது.
NEET exam results 2019 :நீட் தேர்வு 2019 முடிவுகளை வெளியிடப்பட உள்ளன. நீட் தேர்வு முடிவுகளை அறியும் முறை இங்கே தரப்படுகிறது.
நீட் தேர்வை, தமிழகத்தில் இருந்து மட்டும் 1.40 லட்சம் மாணவர்கள் எழுதினர். இம்முறை, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்த முறை, அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், இம்முறை இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
NEET exam results 2019 : மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை நீட் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆண் தேர்வர்களுக்கான dress code
இலகுரக, எளிமையான உடைகளை அணிய வேண்டும்.
முழுக்கை உடைகளை அணியக்கூடாது.
சட்டை மற்றும் டி சர்ட்களில் ஜிப், பாக்ெகட், பெரிய பட்டன்கள், எம்பிராய்டரி உள்ளிட்டவைகள் இருக்கக்கூடாது.
குர்தா, பைஜாமா அணியக்கூடாது ; பேன்ட் மட்டுமே அணிய வேண்டும்
ஷூஅணிவது தடை செய்யப்பட்டுள்ளது. சான்டல், மற்றும் ஸ்லிப்பர்களுக்கு அனுமதி
பெண் தேர்வர்களுக்கான dress code
எம்பிராய்டரி வேலைப்பாடுடன் கூடிய உடைகள், பூ டிசைன் உடைகள்,. பட்டன்களை கொண்ட உடைகளுக்கு அனுமதி இல்லை.
அரைக்கை உடைகளுக்கு மட்டுமே அனுமதி
சல்வார், சுடிதார்கள் அணிய அனுமதி
அதிக உயரம் கொண்ட ஹை ஹீல்ஸ்களுக்கு அனுமதி இல்லை
தோடு, மோதிரம், பென்டன்ட், மூக்குத்தி, நெக்லேஸ் உள்ளிட்ட மெட்டல் பொருட்களுக்கு அனுமதி இல்லை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights