மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அடுத்த வருடம் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வும், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜே.இ.இ போன்ற தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்,
இதுவரை சிபிஎஸ்சி அமைப்பால் நடத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தையும் இனி தேசியத் தேர்வு முகமை நடத்தும். மேலும், ஒரு மாணவர் ஒரே வருடத்தில் இரண்டு முறை நீட் தேர்வினை எழுதலாம். அதில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் எதுவோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக வெளிவந்த அதிகாரப் பூர்வ செய்தியினை ட்விட்டரில் பதிவு செய்திருக்கும் தேசிய ஊடகங்கள்
இந்த வருட நீட்டிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்ய நாளையே கடைசி நாள். பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கான விருப்பத்தேர்வினை தேர்ந்தெடுக்க ஜூலை 9 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் இருக்கிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சீட் அலாட்மெண்ட் ஜூலை 12ம் தேதி அறிவிக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை நீட் எழுத என்ன செய்ய வேண்டும்?
60, 000 மருத்துவ சீட்டுகளுக்கு இந்த வருடம் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியுள்ளார்கள். பெரும்பாலான மாணவர்கள் இரண்டாம் முறையாக தேர்வு எழுதியவர்கள் தான். மே மாதம் நல்ல முறையில் மதிப்பெண் பெறாத மாணவர்கள் டிசம்பர் மாதம் மீண்டும் நீட் தேர்வினை எழுதலாம். அல்லது காத்திருந்து அடுத்த மே மாதத்தில் எழுதலாம்.
முதல் முறை எப்படி தவறு நடந்தது என்று கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்வது எப்படி என்று யோசியுங்கள். மற்ற மாணவர்களுக்கு கிடைக்காத ஒரு அனுபவம் உங்கள் முதல் நீட் தேர்வு அனுபவம் தான். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.