Advertisment

நீட் வினாத்தாள் கசிவு: சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து வினாத்தாளை திருடிய நபர் கைது

நீட் தேர்வு வினாத்தாள் (NEET UG-2024) கசிவு வழக்கில் மேலும் 2 பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
neet protest banner

புதுடெல்லியில் ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு முடிவு முறைகேடுகள் தொடர்பாக, இந்திய இளைஞர் முன்னணி, ஜூலை 8, 2024-ல் நடத்திய போராட்டத்தின் போது, ​​ஒரு போராட்டக்காரர் ஒரு அட்டையை வைத்திருந்த காட்சி. ( PTI Photo)

நீட் தேர்வு வினாத்தாள் (NEET UG-2024) கசிவு வழக்கில் மேலும் 2 பேரை மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ) கைது செய்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: NEET paper leak: Accused who allegedly stole question paper from sealed trunk arrested

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு 2024 வினாத்தாள் (NEET UG-2024) கசிவு வழக்கில் மேலும் 2 பேர் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவரில், பங்கஜ் குமார் என்ற ஆதித்யா, 2017-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஆவார். இவர் ஹசாரிபாக்கில் சீல் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டியில் இருந்து நீட் தேர்வு வினாத்தாளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. பொகாரோவில் வசிக்கும் குமார் பாட்னாவில் கைது செய்யப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபர், ராஜு சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நீட் தேர்வு வினாத்தாளைத் திருட குமாருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. ராஜு சிங் ஹசாரிபாக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த இருவருடன், நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ 6 எஃப்.ஐ.ஆர்-களைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment