Advertisment

NEET Result 2018: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா இந்திய அளவில் 12வது இடம்!!

NEET Result 2018, CBSE NEET 2018 Result Live Updates: 2018-19ம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RRB RPF SI exam postponed, உயர்நீதிமன்றம்

tamil nadu news today live

CBSE NEET Result 2018 Live Updates: மருத்துவ படிப்பின் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இந்தியா முழுவதும் இன்று வெளியாகிறது. இன்று மதியம் 2 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

Advertisment

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேக்கைக்கு கடந்த மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 2018 -19ம் ஆண்டின் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 136 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,255 தேர்வு மையங்களில் சுமார் 13 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதினர்.

5.00 pm : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், இன்னும் 2 வாய்ப்புகள் உள்ளது, கடினமாக உழைத்து மீண்டும் முயற்சித்தால் வெற்றி காணலாம் என்று கூறியுள்ளார்.

3.50 pm : இந்திய அளவில் முதல் 50இடங்களில் தமிழகத்திற்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

3.20 pm : தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே 12வது இடத்தை பிடித்தார்.

3. 00 pm : நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி. நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர, இதில் 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1.39 pm : இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் 99.99% பெற்று முதல் ரேங்க் பெற்றுள்ளார். இயற்பியல் பாடத்தில் 180க்கும் 171 மதிப்பெண், வேதியியல் பாடத்தில் 180க்கு 160 மதிப்பெண் மற்றும் உயிரியியல் பாடத்தில் முழுமையாக 360க்கு 360 மதிப்பெண் பெற்றுள்ளார். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 691 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 

1.17 pm : மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி துவங்கும் என மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

12.52 pm : முதல் கலந்தாய்வு இம்மாதம் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும். 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 6ம் தேதி முதல் 12ம் தேதி முதல் நடைபெறும் என மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

12.44 pm :  மாணவர்கள் தேர்ச்சி குறித்த முழுமையான  தகவல்களும் மதியம் 1 மணிக்குள் சிபிஎஸ்இ அலுவலகத்தில் இருந்து சர்குளர் மூலம் வெளியிடப்படுகிறது.

12.43 pm : மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு இந்த மாதம் 12ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment