Advertisment

நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விடம் கொண்டு சென்றிருக்கக் கூடாது - நிர்மலா சீதாராமன்

நாட்டின் முதல் பிரதமரான நேரு, அதனை ஐநாவுக்கு எடுத்துச் சென்றது ஏன்? இது இந்தியா சார்ந்த பிரச்சினை. அதற்கு நாமே தீர்வு கண்டிருக்க முடியும். அதை தான் நாங்கள் செய்கிறோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விடம் கொண்டு சென்றிருக்கக் கூடாது - நிர்மலா சீதாராமன்

நாட்டின் முதல் பிரதமரான நேரு, காஷ்மீர் விவகாரத்தை ஐநா.வுக்கு எடுத்துச் சென்று சர்வதேச பிரச்சியாக்கினார் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.மாநிலங்களவையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்ஜெட் (2022-23) மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது அவர் இந்த பிரச்சினையை முன்வைத்தார்.

Advertisment

காஷ்மீர் விவகாரத்தை காங்கிரசே சர்வதேச பிரச்சினையாக்கியது. நாட்டின் முதல் பிரதமரான நேரு, அதனை ஐநாவுக்கு எடுத்துச் சென்றது ஏன்? இது இந்தியா சார்ந்த பிரச்சினை. அதற்கு நாமே தீர்வு கண்டிருக்க முடியும். அதை தான் நாங்கள் செய்கிறோம். இதை கையாள்வதில் முந்தைய அரசுக்கும், பாஜக தலைமையிலான அரசுக்கும் வேறுபாடு உள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, "இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லப்பட்டால், ராணுவ மோதல் முடிவுக்கு வருமா, இல்லையா என்பதுதான் பிரச்னை. வாக்கெடுப்பை இந்தியா ஏற்கவில்லை.

இந்தியா தேர்தலை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல், போர்களை சந்தித்தோம். 2014க்கு முன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் இறையாண்மை கொண்ட மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இந்தியாவின் நிலையான நிலைப்பாடாக இருந்து வந்தது என்றார்.

சீதாராமன் பேசுகையில், "சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் 61% குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், நாம் அடைந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஊடுருவல் முயற்சிகளில் 33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2020இல் 51 முறையாக இருந்த எண்ணிக்கை, 2021இல் 34 ஆக குறைந்தது. அதேபோல், போர் நிறுத்த மீறல்களில் 90 சதவீதம் குறைந்துள்ளது. 2020இல் 937ஆக இருந்த எண்ணிக்கை, 2021இல் 98 ஆனது. மேலும், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் 2020இல் 244 ஆக இருந்த எண்ணிக்கை, 2021இல் 229ஆக சரிவை சந்தித்துள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட உயிரிழப்புகள் 33 சதவிகிதம் சரிவைக் கண்டன. 2020இல் 63 பேர் உயிரிழந்த நிலையில், அதன் எண்ணிக்கை 2021இல் 42 ஆனது. எனவே, நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீரில் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகள் குறைந்து வருகின்றன.

மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து ஜே&கேவுக்கான சுமார் 890 மத்திய சட்டங்களின் பலன்களை யூனியன் பிரதேச மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்றார்.

இதுதவிர, 1990 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த வி.பி.சிங் தலைமையிலான அரசுக்கு பாஜக ஆதரவளித்ததாக குறிப்பிட்ட எதிர்க்கட்சிகள், காஷ்மீர் பண்டிட்டுள் மீதான தாக்குதலில் பாஜகவுக்கும் பங்கு இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த சீதாராமன், 1990-க்கு முன்பே ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாநிலத்தில் 1986, நவம்பர் முதல் 1990, ஜனவரி வரை ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது

1989-ஆம் ஆண்டில் மட்டும் ஹிந்துக்கள் மீது 7 முக்கியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பயங்கரவாத மேகங்கள் ஜம்மு-காஷ்மீரை சுற்றி வருவதாக எச்சரித்த அப்போதைய ஆளுநா் ஜக்மோகன், மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மாநாட்டு அரசாங்கம் நவம்பர் 1986 முதல் ஜனவரி 18, 1990 வரை J&K இல் ஆட்சியில் இருந்தது. ஆளுநர் ஜக்மோகன் அப்போதைய முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் ராஜினாமாவிற்குப் பிறகு ஜே.கே-யில் பொறுப்பு ஏற்றார் என்றார்.

சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பட்ஜெட்டில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கேட்டபோது, சீதாராமன், "முழு உரையாடலும் காஷ்மீர் கோப்புகளில் (திரைப்படம்) கவனம் செலுத்தியது போல, பட்ஜெட்டில் கவனம் செலுத்தவில்லை" என்று கூறினார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சனைகளுக்கு பதிலளிக்க உரிமை உள்ளது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir Nirmala Sitharaman Jawaharlal Nehru Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment