Advertisment

நேரு நினைவகம் பெயர் மாற்றம்: அற்ப அரசியல் எனக் காங்கிரஸ் விமர்சனம்

பிரதமர் சங்கரஹாலயாவில், ஒவ்வொரு பிரதமருக்கும் மரியாதை உண்டு. பண்டிட் நேரு தொடர்பான பிரிவு மாற்றப்படவில்லை. மாறாக, அதன் கௌரவம் உயர்த்தப்பட்டுள்ளது என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கூறினார்.

author-image
WebDesk
New Update
Nehru memorial renaming Cong calls it petty says cant deny first PMs role BJP counters look beyond dynasty

டெல்லி நேரு நினைவகம் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், நூலகம் (என்எம்எம்எல்) இனி பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று அழைக்கப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தீன் மூர்த்தி பவன் வளாகத்தில் ஒரு பிரதான்மந்திர சங்க்ரஹாலயா (பிரதமர்களின் அருங்காட்சியகம்) திறக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இது சிறுமையான செயல் என விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்டடங்களின் பெயரை மாற்றுவதால் மரபுகள் அழிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது சிறுமையான செயல், சர்வாதிகார அணுகுமுறை” எனக் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இது அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல்” எனக் கூறினார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், “இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியும் நேரு ஜியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அடையப்படுகிறது.

அருங்காட்சியகத்தில் இருந்து அவரது பெயரை நீக்குவதால், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் நேரு ஜி அனுபவிக்கும் மரியாதைக்குரிய அந்தஸ்தை மாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “கடந்த காலத்தை மதிப்பதில் சில மதிப்பு இருக்கிறது. ஒரு நாள், இன்றைய ஆட்சியாளர்களும் வரலாறாக இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, “அவர்களுக்கு நரசிம்மராவ் மீது கசப்பு இருந்தால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் சாதனைகளில் அவர்களின் பிரச்சனை என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்” எனக் கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே ட்வீட்டுக்கு பதில் கொடுத்த பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, “இந்த பிரச்சினையில் காங்கிரஸின் அணுகுமுறை முரண்பாடாக உள்ளது.

பிரதமர் சங்கரஹாலயாவில், ஒவ்வொரு பிரதமருக்கும் மரியாதை உண்டு. பண்டிட் நேரு தொடர்பான பிரிவு மாற்றப்படவில்லை. மாறாக, அதன் கௌரவம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட ஒரு கட்சிக்கு, அவர்களின் அற்பத்தனம் உண்மையில் சோகமானது. மக்கள் நிராகரிப்பதற்கும் இதுவே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jp Nadda Mallikarjuna Jawaharlal Nehru Congress Vs Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment