Advertisment

நேருவுக்கு மாலை அணிவித்ததால் ஒதுக்கப்பட்ட பெண்...  நேருவின் பழங்குடியின மனைவி மரணம்

புத்னி மஞ்சியாயின் அவருடைய கிராமமான கர்போலாவை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள சால்டோடுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது இப்போது ஜார்க்கண்ட் உடன் இணைக்கப்பட்ட பகுதியாக உள்ளது. 

author-image
WebDesk
New Update
Nehru Tribal wife

நேருவுக்கு மாலை அணிவித்ததால் கிராமத்தினரால் ஒதுக்கப்பட்ட பெண்...  நேருவின் பழங்குடியின மனைவி மரணம்

புத்னி மஞ்சியாயின் அவருடைய கிராமமான கர்போலாவை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள சால்டோடுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது இப்போது ஜார்க்கண்ட் உடன் இணைக்கப்பட்ட பகுதியாக உள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Nehru’s ‘tribal wife’, who was ostracised by village for exchanging garlands with ex-PM, dies at 80

தன்பாத் மாவட்டத்தின் மேற்கு பண்டா பஞ்சாயத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தில் புத்னி மஞ்சியாயின் உடல் வைக்கப்பட்டுள்ளது, அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1959-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மாலைகளை பரிமாறிக்கொண்டதற்காக தனது சந்தாலி பழங்குடி சமூகத்தால் ஒதுக்கப்பட்டு கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படது. புத்னி மஞ்சியாயின் (80) இறந்த சில நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 17-ம் தேதி அவர் இறந்தபோது அவர் திருப்தியாக இருந்தார், புகார் எதுவும் இல்லை என்று அவருடைய பேரன் கூறினார். 

43 வயதான பாபி தத்தா கூறுகையில்,  “என் பாட்டிக்கு நடந்தது மிகவும் தவறானது. ஆனால்,  நான் அதை விட்டுவிட்டேன் ... அவரது கடைசி நேரத்தில், அவர் புகார் செய்யவில்லை, அவர் இறந்தபோது அமைதியாக இருந்தார்” என்று 43 வயதான பாபி தத்தா கூறினார்.

1959-ம் ஆண்டு, பஞ்செட் அணை திறப்பு விழாவிற்காக, பீகாரின் ஒரு பகுதியான தன்பாத் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, 1959-ம் ஆண்டு நேருவுடன் மாலைகளை மாற்றிக் கொண்டபோது, மஞ்சியாயின் இளம் வயது பெண்ணாக இருந்தார். மாலைகளை மாற்றுவது திருமணத்திற்குச் சமம் என்று அவரது சமூகத்தின் தலைவர்கள் ஆணையிட்டு, அவரை ஒதுக்கி வைத்தனர்.

இது ஜார்க்கண்டில் இணைக்கப்பட்டுள்ள கர்போலா கிராமத்தை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள சால்டோடுக்கு செல்ல அவரைக் கட்டாயப்படுத்தியது.

உள்ளூர் செய்தி சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், மஞ்சியாயின் கூறியதாவது: “என்ன நடந்தது? ஒன்றுமில்லை. நேரு வந்தார், நாங்கள் மாலைகளை மாற்றிக் கொண்டோம், அவர் போய்விட்டார்... பின்னர் நான் நேருவின் ‘பழங்குடியின மனைவி’ என்று அழைக்கப்பட்டேன். என்னுடைய நலனுக்காக நான் ஓட வேண்டியிருந்தது.” என்று கூறினார்.

அவரது பேரன் தத்தா கூறியதாவது: என் பாட்டி நேரு ஜியை ‘திருமணம்’ செய்ததற்காக கொல்லப்படலாம் என்பதால், அவர் உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். அந்த நாட்களில், கிராமத்தின் முதியவர்கள் சில காலாவதியான நடைமுறைகளைக் கொண்டிருந்தனர், அதற்கு அவர் பலியாகிவிட்டார். அவர் சால்டோட் பகுதிக்கு தப்பிச் சென்று அரசாங்கத்தால் இயக்கப்படும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்தார்.” என்று கூறினார்.

இவர் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் (டி.வி.சி) உதவி எழுத்தராகப் பணிபுரிகிறார். இந்த வேலைக்கு அவருடைய பாட்டிதான் காரணம்.

“என் பாட்டிக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக மத்திய அரசு நிறைய விமர்சனங்களைப் பெற்றது. மேற்கு வங்காளத்திற்குச் சென்றிருந்தபோது, உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவர், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கூறினார். அது பின்னர் 1985-86 வாக்கில், அவருக்கு டி.வி.சி-யில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை கிடைக்க வழிவகுத்தது. அவர் 2005-ல் டி.வி.சியில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர், அவரது வற்புறுத்தலின் பேரில், தத்தாவிற்கு அங்கு வேலை கிடைத்தது.” என்று மஞ்சியாயின் பேரன் தத்தா கூறினார்.

இருப்பினும், புத்னி மஞ்சியாயின் டி.வி.சி-யில் பணிபுரியும் முன், சால்டோட் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். அங்குதான் அவர் சுதிர் தத்தாவை சந்தித்தார். அவர்தான் திருமணம் செய்துகொண்டார் என்று அவரது பேரன் கூறினார். இந்த தம்பதியருக்கு ரத்னா தத்தா என்ற மகள்கள் உள்ளனர்.

அவர் இறப்பதற்கு சற்று முன்பு, அவர் தனது உறவினர்களை சந்தித்து திருப்தி அடைந்தார், மேலும் அவர் வயது முதிர்வு தொடர்பான சிக்கல்களால் இறந்தார் என்று கூறினார்.

அவரது உடல் தன்பாத் மாவட்டத்தின் மேற்கு பண்டா பஞ்சாயத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர் முக்கியஸ்தர்களில் ஒருவரான பைரப் மோண்டல் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்: “அவர் வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாக இருந்தார். நாங்கள் அவருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்க் கோருவோம்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jawaharlal Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment