/tamil-ie/media/media_files/uploads/2018/07/shashi-tharoor.jpg)
மக்களவை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சியாவர் (சீதா தேவி) ராமச்சந்திரா கி ஜெய். நான் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லவில்லை. சிலர் ஜெய் ஸ்ரீராம் என்பதை அரசியல் முழக்கமாக மாற்றியுள்ளனர்.
வட இந்தியப் பேச்சு வழக்கில் சியா என்றால் சீதை என்று பொருள்.
சீதாவின் கணவர் ராமச்சந்திராவுக்கு ஜெய் என்று நான் சொன்னது, பெண்கள் விரோத மனப்பான்மையால் சில நபர்கள் சீதையைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.
அதனால்தான் ராமரை மட்டும் பார்க்கிறார்கள். பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவரும் சீதையுடன் நின்ற ராமனைத் தேடுகிறார்கள் (எனது தனிப்பட்ட பக்தி பற்றி ஒரு வாக்கியம் எழுதியுள்ளேன்) இதில் எந்த சர்ச்சையும் நான் காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “ராம பிரானை பாஜகவிடம் ஒப்படைக்க தானோ அல்லது அவரது கட்சியோ தயாராக இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், “காங்கிரஸ் ராமரை பாஜகவிடம் விட்டுவிட வேண்டுமா? அதற்கு நாங்கள் தயாராக இல்லை” எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Neither me nor Congress would relinquish Ram to BJP: Tharoor
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.