பீகாரின் கிஷன்கஞ்சில் இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே நேபாள காவல்துறை இன்று 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் படு காயமடைந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே பீகாரின் கிஷன்கஞ்சில் நேபாள காவல்துறை இன்று 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் படு காயமடைந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருவதாக கிஷன்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் இந்தியா-நேபாள எல்லையில் இதுபோல, இரண்டாவது சம்பவமாக நடந்துள்ளது. கடந்த மாதம், பீகார் மாநிலம் சீதாமாரி அருகே ஒரு எல்லையில் ஏற்பட்ட மோதலின் போது எல்லைப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான நேபாள ஆயுத போலீஸ் படை ஒரு குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இருப்பினும், நேபாளம் மற்றும் பீகார் மற்றும் சாஸ்திர சீமா பால் ஆகியவற்றின் மூத்த போலீஸ் அதிகாரிகள் இதை ஒரு உள்ளூர் சம்பவம் என்று அழைப்பதில் சிக்கிக் கொண்டனர். மேலும், உத்தரக்காண்ட்டில் கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய பிராந்திய உரிமைகோரல்கள் தொடர்பாக டெல்லி மற்றும் காத்மாண்டு இடையே எல்லை பிரச்னை எதுவும் இல்லை என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"