சுய பாதுகாப்புடன் கூடிய இரண்டு பெரிய போயிங் 777 விமானங்களை (LAIRCM) இந்திய அரசு வாங்கவிருக்கிறது. இதன் மதிப்பு, ரூபாய் 190 மில்லியன்.
இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நீண்ட தூர பயணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த போயிங் 777 விமானம், 26 வருட பழமையான போயிங் 747 விமானத்தை ‘ரீ ப்ளேஸ்’ செய்யும். இது ‘ஏர் இந்தியா ஒன்’ அல்லது ’இந்தியன் ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று அழைக்கப்படும்.
LAIRCM- என்பது மனிதத் தாக்குதல், மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து, விமானத்தைப் பாதுகாக்கும் ஓர் திட்டமாகும். இது குழு-எச்சரிக்கை நேரத்தை அதிகரித்து, தவறான எச்சரிக்கை அலாரங்களை குறைக்கிறது. தவிர இந்திய விமானப்படையின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
தோள்பட்டை – துப்பாக்கி சூட்டை தவிர்த்து, எதிரிகளின் ரேடாரை ஜாம் செய்யும். அதோடு ரேடார் எச்சரிக்கைப் பெறுதல், குறியாக்கம் செய்யப்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வசதிகள் ஆகியவற்றையும் இந்த ரக விமானங்கள் கொண்டிருக்கும்.
அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்தவும், வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரித்து, இந்தியாவின் திறனை மேம்படுத்தவும் இந்த போயிங் 777 விமானம் உதவும்.