Advertisment

புதிய தேர்தல் ஆணையர்கள்: உத்தரகாண்ட் யு.சி.சி-யை மேற்பார்வை செய்த சந்து; கூட்டுறவில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்த குமார்

2019-ம் ஆண்டில் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபோது குமார் உள்துறை அமைச்சகத்தில் பணியமர்த்தப்பட்டார், அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தின் பொது சிவில் சட்டம் (யு.சி.சி) வரைவு மசோதாவை தயாரிப்பதை சந்து மேற்பார்வையிட்டார்.

author-image
WebDesk
New Update
ECs

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் (வலது) மற்றும் சுக்பீர் சிங் சந்து (இடது) தேர்தல் ஆணையர்களாக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். (புகைப்படங்கள்: நாடாளுமன்ற விவகார அமைச்சகம் மற்றும் X/@NHAI_Official)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2019-ம் ஆண்டில் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபோது குமார் உள்துறை அமைச்சகத்தில் பணியமர்த்தப்பட்டார், அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தின் பொது சிவில் சட்டம் (யு.சி.சி) வரைவு மசோதாவை தயாரிப்பதை சந்து மேற்பார்வையிட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: The new ECs: Sandhu oversaw Uttarakhand UCC, Kumar ensured co-ops’ transparency

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட 2 தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகிய இருவரும், இந்திய ஆட்சிப் பணியில் 1988-ம் ஆண்டு அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். சுக்பீர் சிங் சந்து உத்தரகாண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஞானேஷ் குமார் கேரளா பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.

2019-ம் ஆண்டில் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபோது குமார் உள்துறை அமைச்சகத்தில் பணியமர்த்தப்பட்டார், அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தின் பொது சிவில் சட்டம் (யு.சி.சி) வரைவு மசோதா தயாரிப்பதை சுக்பீர் சிங் சந்து மேற்பார்வையிட்டார்.

ஜூலை 2021-ல் சுக்பீர் சிங் சந்து உத்தரகாண்ட் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பா.ஜ.க.வின் மத்திய தலைமை, முதல்வர் திரத் சிங் ராவத்துக்குப் பதிலாக புஷ்கர் சிங் தாமியை நியமித்த சில நாட்களுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட முதல் அதிகாரத்துவ மாற்றம் அது.

அதற்கு முன், சுக்பீர் சிங் சந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தலைவராக கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருந்தார். சுக்பீர் சிங் சந்துவின் நியமனத்திற்காக உத்தரகாண்ட் பணியாளர் துறை பிறப்பித்த உத்தரவில், தாமதமின்றி பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்,  “சுக்பீர் சிங் சந்து அதிகார மையங்களின் செயல்பாட்டை நெறிப்படுத்தினார், துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்தார், அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு துறைகளின் ஆய்வுக் கூட்டங்களை தவறாமல் நடத்தினார்.” என்று கூறினார். 

சுக்பீர் சிங் சந்துவின் காலத்தில் தயாரிக்கப்பட்ட யு.சி.சி வரைவு மசோதா, அவர் தலைமைச் செயலாளராக தனது பணிக் காலத்தை ஜனவரி 31-ம் தேதி நிறைவு செய்து, ஒரு வாரத்திற்குப் பிறகு, பிப்ரவரி 7-ம் தேதி உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அம்மாநிலத்தில் கேதார்நாத் ஆலயத்தின் மறு வளர்ச்சியையும் அவர் கண்காணித்தார்.

சுக்பீர் சிங் சந்து பிப்ரவரியில், ஒரு ஆண்டு காலத்திற்கு மத்தியில் லோக்பால் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) சுக்பீர் சிங் சந்து இருந்த காலத்தில், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரச்னைகளை சமரசம் செய்து தீர்க்கப்பட்டன, இது ஒப்பந்ததாரர்கள் மற்றும் வங்கிகளுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

சுக்பீர் சிங் சந்து உத்தரகாண்டிற்கு மாற்றப்பட்டபோது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அவரது சாதனைகளைப் பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். “... தேசிய நெடுஞ்சாலைகள் அவரது பதவிக் காலத்தில் COVID-19-ன் சவாலான காலங்களிலும் கூட ஒரு சாதனை விருது, கட்டுமானம் மற்றும் தகராறு தீர்வைக் கண்டது... அவரது பதவிக்காலம் என்.எச்.ஏ.ஐ (NHAI)-ல் இதுவரை எட்டப்பட்ட மிகச் சிறந்த ஒன்றாகும். இந்தியா முழுவதும் ஆக்சிஜன் ஆலைகளை அமைப்பதில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என்று கட்கரி குறிப்பிட்டார்.

ஞானேஷ் குமார் ஜனவரி 31-ம் தேதி கூட்டுறவு செயலாளராக பதவியேற்றார். அவரது பதவிக் காலத்தில், கூட்டுறவு அமைச்சகம் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்.எஸ்.சி.எஸ்) (திருத்தம்) சட்டம் 2023, இத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புணர்வை அதிகரிக்கவும் இயற்றியது. பாரதிய பீஜ் சககாரி சமிதி லிமிடெட், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் மற்றும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் ஆகிய மூன்று புதிய தேசிய கூட்டுறவு அமைப்புகளின் உருவாக்கத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

சஹாரா குழுமத்தின் நான்கு பல மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் உண்மையான வைப்பாளர்களின் கோரிக்கைகளை சமர்பிப்பதற்காக சி.ஆர்.சி.எஸ் (CRCS) சஹாரா பணத்தைத் திரும்பப்பெறும் தளத்தை சரியான நேரத்தில் தொடங்குவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

முன்னதாக, ஞானேஷ் குமார் மத்திய அரசின் நாடாளுமன்ற விவகார செயலாளராக இருந்தார். 2019-ம் ஆண்டில் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபோது, அவர் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment