Advertisment

தேர்தல் கூட்டணி பேரம்; ஆடியோ லீக் : சர்ச்சையில் கேரள பாஜக

ஜனாதிபத்ய ராஷ்டிரிய சபா எனும் ஜே.ஆர்.எஸ் கட்சியின் பொருளாளர் பிரசீதா அஜிகோட் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக இன்னும் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கையை வெளியிடுவதாக பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகம் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
தேர்தல் கூட்டணி பேரம்; ஆடியோ லீக் :  சர்ச்சையில் கேரள பாஜக

கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நிதி தொடர்பாக, பாஜக மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது, கேரள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவரிடம் 10 கோடி ரூபாயை கோரியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இறுதியாக, 10 லட்சத்தை கூட்டணிக் கட்சித் தலைவரிடம் இருந்து பாஜக தலைவர் சுரேந்திரன் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisment

ஜனாதிபத்ய ராஷ்டிரிய சபா எனும் ஜே.ஆர்.எஸ் கட்சியின் பொருளாளர் பிரசீதா அஜிகோட் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக இன்னும் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கையை வெளியிடுவதாக பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகம் கூறியுள்ளது. பிரசீதா தனக்கும் சுரேந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ரூ .10 லட்சம் ஜே.ஆர்.எஸ் தலைவரான சி.கே.ஜானுவிடம் இருந்து பெற்றுக் கொண்டதை அது குறிக்கிறது.

அந்த ஆடியோவில், ஜானு மார்ச் 6 ஆம் தேதி வரட்டும். நான் அதை தனிப்பட்ட முறையில் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்த பணத்தை பெற்றுக் கொள்ள நீங்களும் வாருங்கள். தேர்தலின் போது, இந்த பணத்தை அங்கும் இங்கும் கொண்டு செல்ல முடியாது என்று அந்த ஆடியோவில் இருவரும் உரையாடுகின்றனர். பிரசீதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜானு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பிரசீதா மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 7-ம் தேதி நடைபெற்ற பழங்குடிப் போராட்டம் ஒன்றுக்கு தலைமை தாங்கிய ஜானு, ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலத் தேர்தலுக்காக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததாகக் கூறினார். சமீபத்திய இந்த குற்றச்சாட்டு பாஜக விற்கு மாநிலத்தில் ஆபத்தாக மாறியுள்ளது. குறிப்பாக, திரிசூரில் ரூ .3.5 கோடி ரொக்கமாக பிடிபட்டதை அடுத்து பாஜக தலைவர்கள் பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் கணக்கிடப்படாத தேர்தல் நிதியின் ஒரு பகுதியாக இருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், பிரசீதா பாஜக தலைவர் மற்றும் ஜானுவுக்கு இடையேயான பணப் பரிமாற்றத்தை நிரூபிப்பதாக சவால் விடுத்துள்ளார். ஜானிவில் இந்த செயலினால் கட்சியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் பரசீதா குற்றம் சாட்டி உள்ளார்.

சுரேந்திரன் ஜானுவை ஒரு முக்கிய பழங்குடித் தலைவர் என்ற காரணத்தால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற செய்தார். பின்னர், ஜானு ரூ .10 கோடி ரூபாய் தருவதாக கூற, மத்திய அரசில் அமைச்சரவை பதவி மற்றும் ஒரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதிக்காகவும் கோரிக்கை விடுத்திருந்தார். மார்ச் மாத தொடக்கத்தில் கோட்டையத்தில் இது தொடர்பாக சுரேந்திரனுடன் ஜானு நேரடியாக கோரிக்கைகளை எழுப்பிய போது நான் அவர்களுடன் இருந்தேன் எனவும் பிரசீதா குற்றம் சுமத்தி உள்ளார்.

மார்ச் 6 ஆம் தேதி ரூ .10 லட்சத்தை அளிப்பதற்காக ஜானுவுடன் திருவனந்தபுரத்திற்கு தான் சென்றதாகவும், ஆனால் பணம் விருந்தினர் மாளிகையில் ஒப்படைக்கப்படவில்லை எனவும் பிரசீதா கூறியுள்ளார். அப்போது, தற்செயலாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 6 ஆம் தேதி தாமதமாக திருவனந்தபுரத்தை அடைந்தார்.

குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானு, ‘பிரசீதா மற்றும் எனது கட்சியில் உள்ள மற்றவர்களை விட பாஜக தலைவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. பிறகு, நான் ஏன் மூன்றாவது நபரின் உதவியை நாட வேண்டும். என் சார்பாக, பிரசீதா பணம் அளித்தாரா என்பது பற்றியெல்லாம் தெரியாது. இது குறித்து நடத்தப்பட இருக்கும் விசாரணை அதை வெளிப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Kerala Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment