வாரிசு அரசியல் கட்சி வேறுபாடின்றி, கர்நாடக அரசியலில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பின்னணியை ஆய்வு செய்தால், ஐந்தில் ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினர் அரசியல் பதவி அல்லது பொதுப் பதவியில் இருந்தவரின் வாரிசு உறுப்பினர்களாக உள்ளனர்.
பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் குறைந்தபட்சம் 61 வேட்பாளர்கள் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இதில் மூன்று அப்பா-மகன், இரண்டு அப்பா-மகள் இரட்டையர்கள் மற்றும் ஐந்து சகோதரர்கள் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 43 பேர் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தில் இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் அரசியல் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
ராம்நகரில் தோல்வியடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் உட்பட சில வம்சத்தினர் தேர்தலில் தோல்வியடைந்தனர்; காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வாரில் தோல்வியடைந்தார்.
தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடி தொகுதியில் வெளியேறும் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரிபிரசாத்தின் சகோதரர் மகன் ரக்ஷித் சிவராம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கலபுர்கி மாவட்டத்தில் உள்ள கொப்பல் தொகுதியில் பா.ஜ.க எம்.பி சங்கன்னா கரடதியின் மருமகள் மஞ்சுளா அமரேஷ் தோல்வியடைந்தார். முன்னாள் அமைச்சர் ஆனந்த் சிங்கின் மகன் சித்தார்த் சிங் பல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகரில் தோல்வியடைந்தார்.
தந்தை-மகன் எம்.எல்.ஏ வரிசையில் இரண்டு தந்தை மகன் இடம்பிடித்துள்ளனர். அந்த இருவரில் ஒரு தந்தை-மகன் காங்கிரஸைச் சேர்ந்த ஷாமுனுரு சிவசங்கரப்பா மற்றும் அவரது மகன் எஸ்.எஸ். மல்லிகார்ஜுன் மற்றும் இன்னொரு தந்தை-மகன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஜி.டி. தேவேகவுடா மற்றும் ஹரிஷ் கவுடாஆகியோர் ஆவர். சிவசங்கரப்பா மற்றும் மல்லிகார்ஜுன் ஆகியோர் தாவணகெரே வடக்கு மற்றும் தாவணகெரே தெற்கு தொகுதிகளிலும், தேவேகவுடா மற்றும் ஹரிஷ் ஆகியோர் மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டேஸ்வரி மற்றும் ஹுன்சூர் தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
தந்தை-மகள் வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவும், தேவனஹள்ளி (பெங்களூரு கிராமப்புறம்) மற்றும் கோலார் தங்கவயல் தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ரூபாகலா எம் தந்தை-மகள் எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.
மூன்று ஜார்கிஹோலி சகோதரர்களும் பெலகாவி மாவட்டத்தின் மையத்தில் உள்ள மூன்று பக்கத்து பக்கத்து தொகுதிகளில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி யெம்கன்மார்டி தொகுதியில் நான்காவது முறையாக வெற்றி பெற்றார். இவரது சகோதரர்கள் ரமேஷ், பாலச்சந்திரா ஆகியோர் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டனர். ரமேஷ் ஏழாவது முறையாக கோகாக் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், பாலச்சந்திரா ஆறாவது முறையாக அரபாவி தொகுதியில் வெற்றி பெற்றார்.
பெல்லாரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்க சுரங்கத் தொழிலதிபர்களான ரெட்டி சகோதரர்களுக்கு இது பெரும்பாலும் மோசமான செய்தியாக இருந்தது, அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.
கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி தொகுதியில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டி வெற்றி பெற்றாலும், அவரது கர்நாடகா ராஜ்ய பிரகதி பக்ஷ (கே.ஆர்.பிபி) கட்சிக்கு கிடைத்த ஒரே வெற்றி இது. அவரது சகோதரர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சோமசேகரா மற்றும் கருணாகரா இருவரும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
பெல்லாரி சிட்டி தொகுதியில் காங்கிரஸின் நர பரத் ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட சோமசேகரா தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியாளர் ஜனார்த்தனாவின் மனைவி அருணா லட்சுமியும் தோல்வியடைந்தார்.
முதல்வர் பதவியில் இருந்து வெளியேறும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் எஸ்.ஆர். பொம்மை ஷிக்கான் தொகுதியிலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள சித்தாப்பூரில் இருந்தும் வெற்றி பெற்றனர்.
முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் இரண்டு மகன்களுக்கு தேர்தல் முடிவு வெற்றி தோல்வி என கலவையாக இருந்தது. ஒரு மகன் அஜய் சிங் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள ஜெவர்கி தொகுதியில் வெற்றி பெற்றார். மற்றொரு மகன் விஜய் சிங், பிதார் மாவட்டத்தில் பசவகல்யாண் தொகுதியிலும் தோல்வியடைந்தார். இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர்.
முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகன்களான மது மற்றும் குமார் பங்காரப்பா சகோதரர்கள் சிவமொக்கா மாவட்டம் சொரபா தொகுதியில் போட்டியிட்டனர். பா.ஜ.க-வின் தற்போதைய எம்.எல்.ஏ குமார் பங்காரப்பா, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மது-விடம் தோல்வியடைந்தார்.
முன்னாள் அமைச்சர் சி மோட்டம்மாவின் மகள் நயனா ஜாவர் முதல் முறையாக வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பெங்களூருவில் உள்ள நேஷனல் இந்திய சட்டப்பள்ளி பல்கைக்கழகத்தின் முன்னாள் மாணவர், 43 வயதான நயனா ஜாவர் காங்கிரஸ் சார்பில் முடிகெரே தொகுதியில் இருந்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பி.எஸ். எடியூரப்பாவின் விசுவாசியான எம்.பி. குமாரசாமி, பா.ஜ.க-வில் இருந்து விலகி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததன் மூலம் அவர் பயனடைந்தார். அந்த இடத்தில் பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்புகளை குமாரசாமி சிதைத்தார்.
அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் பட்டியல் இதோ; ஆனால், இது முழுமையானது அல்ல:
காங்கிரஸ்
பெங்களூரு: காந்தி நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஆர். குண்டுராவின் மகன் தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற்றார்.
சிக்கோடி சடல்கா (பெலகாவி) தொகுதியில் முன்னாள் எம்.பி. பிரகாஷ் ஹுக்கேரியின் மகன் கணேஷ் ஹுக்கேரி வெற்றி பெற்றார்.
பைல்ஹோங்கலில் (பெலகாவி) முன்னாள் அமைச்சர் சிவானந்த் கவுஜாலகியின் மகன் மஹந்தேஷ் கவுஜாலகி வெற்றி பெற்றார்.
ஹங்குண்டில் (பாகல்கோடு) முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். காஷப்பனவரின் மகன் விஜயநாத் எஸ். காஷப்பனவர் வெற்றி பெற்றார்.
குல்பர்காவில் உத்தர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கமர் உல் இஸ்லாமின் மனைவி கனீஸ் பாத்திமா வெற்றி பெற்றார்.
பால்கி (பிதார்) தொகுதியில் முன்னாள் அமைச்சர் பீமண்ணா காந்த்ரேவின் மகன் ஈஸ்வர் காந்த்ரே வெற்றி பெற்றார்.
முன்னாள் அமைச்சர் சி பைர கவுடாவின் மகன் கிருஷ்ண பைரகவுடா, பெங்களூரு நகர்புறம் பைடராயனபுரா தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஹொசகோடு (பெங்களூரு கிராமப்புறம்) தொகுதியில் பா.ஜ.க எம்.பி. பி.என். பச்சே கவுடாவின் மகன் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றார்.
மங்களூரில் முன்னாள் எம்.எல்.ஏ யு.டி. ஃபரீத்தின் மகன் யு.டி. காதர் வெற்றி பெற்றார்.
விராஜ்பேட்டை (குடகு) தொகுதியில் முன்னாள் எம்.எல்.சி ஏ.கே. சுப்பையாவின் மகன் ஏ.எஸ். பொன்னனா வெற்றி பெற்றார்.
நஞ்சன்கூடு (மைசூரு) தொகுதியில் முன்னாள் எம்.பி. துருவநாராயணனின் மகன் தர்ஷன் துருவநாராயணா வெற்றி பெற்றார்.
முன்னாள் அமைச்சர் மகாதேவ பிரசாத்தின் மகன் எச்.எம். கணேஷ் பிரசாத் குண்டலுபேட்டை (சாமராஜநகர்) தொகுதியில் வெற்றி பெற்றார்.
பபலேஷ்வர் (பிஜப்பூர்) தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எம். பாட்டீலின் மகன் எம்.பி. பாட்டீல் வெற்றி பெற்றார்.
கடக் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.எச். பாட்டீலின் மகன் எச்.கே. பாட்டீல் வெற்றி பெற்றார்.
எச்.டி.கோட்டை (மைசூரு) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சிக்கமாதுவின் மகன் அனில்குமார் சி வெற்றி பெற்றார்.
நரசிம்மராஜா (மைசூரு) தொகுதியில் முன்னாள் அமைச்சர் அஜீஸ் சைட்டின் மகன் தன்வீர் சேட் வெற்றி பெற்றார்.
முடிகெரே (சிக்கமகளூரு) தொகுதியில் முன்னாள் அமைச்சர் மோட்டம்மாவின் மகள் நயனா ஜாவர் வெற்றி பெற்றார்.
பா.ஜ.க
பா.ஜ.க நாடாளுமன்ற குழு உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா ஷிகாரிபுராவில் (சிவமொக்கா) வெற்றி பெற்றார்.
நிப்பானி (பெலகாவி) தொகுதியில் சிக்கோடி எம்.பி. அண்ணாசாகேப் ஜொல்லேவின் மனைவி சசிகலா ஜொல்லே வெற்றி பெற்றார்.
பெலகாவி ஹக்கேரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் உமேஷ் கட்டியின் மகன் நிகில் கட்டி வெற்றி பெற்றார்.
கலபுர்கி எம்பி உமேஷ் ஜாதவின் மகன் அவினாஷ் ஜாதவ், சிஞ்சோலி (கலபுர்கி) தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஹூப்ளி-தர்வாட் மேற்கு (தர்வாட்) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகாந்த் பெல்லாட்டின் மகன் அரவிந்த் பெல்லாட் வெற்றி பெற்றார்.
பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் மாமாவான எல் ஏ ரவிசுப்ரமணி, பசவன்குடியில் (பெங்களூரு நகர்ப்புறம்) வெற்றி பெற்றார்.
மகாதேவபுராவில் (பெங்களூரு நகர்ப்புறம்) பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியின் மனைவியும், எம்.எல்.ஏ எஸ் ரகுவின் சகோதரியுமான மஞ்சுளா எஸ் வெற்றி பெற்றார்.
துமகுரு சிட்டியில் பா.ஜ.க எம்.பி., ஜி.எஸ். பசவராஜுவின் மகன் ஜி.பி. ஜோதி கணேஷ் வெற்றி பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“