புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர்.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி விளங்குகிறது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை புதுச்சேரியை நோக்கி மதுப்பிரியர்களை இழுக்கச் செய்கிறது.
புதுச்சேரியில் சுமார் 1000-க்கும் அதிகமான மது வகைகளும், 50-க்கும் மேற்பட்ட பீர் வகைகளும் விற்பனையாகிறது. சாதாரண மதுக்கடையில் இருந்து பல வசதிகளுடன் கூடிய நட்சத்திர பார் மற்றும் ரெஸ்டோ பார்கள் என 425 பார்கள் உள்ளன.
இந்நிலையில், 2025 புத்தாண்டை வரவேற்க மதுபான கடைகள் புதுபொலிவு பெறுகின்றன. புத்தாண்டு நள்ளிரவு 1 மணி வரை பார்களில் மது விநியோகம் செய்ய புதுச்சேரி கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது.
கூடுதலாக, புத்தாண்டு நள்ளிரவில் மது பார்களில் டி.ஜே. இசை நிகழ்ச்சிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.
ஜப்பான் விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், நியூயார்க் வோட்கா, கோவா பென்னி, காஷ்மீர் பீர் என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன.