New NRC : தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான விசாரணை ஒன்றிற்காக தன்னுடைய அச்சல்பாரா கிராமத்தில் இருந்து 450 கி.மீ தொலைவில் இருக்கும் மையத்திற்கு சென்றார் ஹனிஃப் அலி. இந்த விவசாயி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 14 நபர்களும் அங்கு சென்று திரும்பினார்கள். ஆனால் வருகின்ற வழியில் ஹனிஃப் அலி விபத்தில் சிக்கி மரணமடைந்தார். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இந்த 15 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
இந்நிலையில் மீண்டும் புதிய என்.ஆர்.சி. குறித்து ஆலோசனை செய்து வருவதாக பாஜக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியான என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாத இந்துக்கள் குறித்து அதிக அளவு கேள்வி எழுப்பியுள்ளது பாஜக. நான் என்னுடைய மாமாவை என்னுடைய பைக்கில் வைத்து அழைத்துச் சென்றேன். ஒவ்வொரு முறையும் இந்த என்.ஆர்.சியில் எங்களின் பெயர்களை இணைக்க நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. எத்தனை முறை தான் நாங்கள் இந்நாட்டு பிரஜைகள் என்று உங்களிடம் நிரூபிப்பது. இதற்கு நீங்கள் எங்களை கொன்றேவிடலாம் என இறந்து போன ஹனிஃப் அலியின் உறவினர் மோனிருல் இஸ்லாம் கூறியுள்ளார்.
To read this article in English
மஜோர்டாப் உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 37 வயதான சம்சூல் ஹோக்யூ. என்.ஆர்.சி. யின் இரண்டு பக்கங்களையும் அவர்கள் பார்த்திருக்கிறார். அவர் ஃபீல்ட் ஆஃபிசராக என்.ஆர்.சி. அத்தாரிட்டிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதே நேரத்தில் தன் மனைவியின் சகோதரி அபிதா சித்திகாவை அந்த பட்டியில் இடம் பெற வைக்க பெரிய போராட்டமே நடத்தியுள்ளார். அவருடைய 30 குடும்ப உறுப்பினர்கள் என்.ஆர்.சியின் க்ளைம்ஸ் மற்றும் அப்ஜெக்சன் விசாரணைக்காக 60 கி.மீ அப்பால் உள்ள அமிங்கானுக்கும், 100 கி.மீ அப்பால் உள்ள ரங்கியாவுக்கும் பயணிப்பதையே வேலையாக கொண்டிருந்தனர். அதில் 7 நபர்களோ 350 கி.மீ அப்பால் இருக்கும் கோலாகாட்டுக்கு பயணித்து திரும்பினர்.
இன்னும் ஒருமுறை என்.ஆர்.சி புதிதாக கொண்டு வரப்பட்டால் அனைவருக்கும் மாரடைப்பே வந்துவிடும். படிக்காதவர்கள், ஏழை மக்களின் நிலையை யோசித்து பாருங்கள். இந்த பயணத்தால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை விடுங்கள். நாங்கள் இந்தியர்கள் தான். எத்தனை முறை நாங்கள் திரும்ப திரும்ப இதனை நிரூபிக்க இயலும். ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்றவர்களின் நிலை இப்படி இருக்கிறது என்றால் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. ஃபாரினர்ஸ் ட்ரிபுயூனல் செல்லும் போது ஒவ்வொரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை பெறவும் வழக்கறிஞர்களுக்கு ரூ. 1000 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று அவர் அறிவித்தார்.
பொங்கைகௌன் நகரில் வசித்து வரும் அம்ரித் லால் தாஸ் தன்னுடைய பெயரும் தன்னுடைய நான்கு சகோதரர்களின் பெயர்களும் இடம் பெற மிக போராடினார். ”மீண்டும் இதே போன்ற ஒரு என்.ஆர்.சி திட்டம் கொண்டுவரப்பட்டு, அதே மக்கள், அதே அலுவலக அதிகாரிகளிடம், அதே ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் மக்களின் பணம் ரூ. 1600 கோடி வீணாய் போனது என்று தான் அர்த்தம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் அம்ரித் லால்.
என்.ஆர்.சி திட்டம் நிறைய படிக்காத, ஏழை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் பளுவையும் ஏற்படுத்தியுள்ளது. என்.ஆர்.சி திட்டம் முழுமையும் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் பாஜக அரசு செயல்படுத்தியது. ஆனால் இப்போது என்ன பிரச்சனை என்று கௌஹாத்தியை சேர்ந்த வழக்கறிஞர் அமன் வதூத் கேள்வி எழுப்பியுள்ளார்.
40 வயதான தொழிலதிபர் மனோஜ் தாஸ் அசாம் மாநிலத்தின் ஹோஜாய் நகரில் வசித்து வருகிறார். அவருடைய 70 வயது கமலா தாஸ் என்.ஆர்.சி. பட்டியலில் இடம் பெறவில்லை. எங்களைப் போன்ற நிறைய பெங்காலி இந்துக்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மீண்டும் ஒரு முறை மத்திய அரசு என்.ஆர்.சி திட்டத்தை புதிதாக கொண்டு வருமானால் நிச்சயமாக, புகார் ஏதும் அளிக்காமல் நாங்கள் மீண்டும் என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற முயற்சி செய்வோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.