Advertisment

10 வருட டைம்.. புதிய நாடாளுமன்ற கட்டடம்: பகீர் கிளப்பும் சஞ்சய் ராவத்

டெல்லி அரசாங்கம் மூடநம்பிக்கைகளாலும், குருட்டுப் பின்பற்றுபவர்களாலும் சூழப்பட்டுள்ளது. நாட்டை நடத்துபவர்களின் மனதில் மூடநம்பிக்கை, கிரகங்கள் மற்றும் ஜாதகங்களின் தாக்கம் உள்ளது.

author-image
WebDesk
New Update
New Parliament building will reflect the aspiration of Indian youths says Modi

ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது என சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

Sanjay Raut comment on New Parliament building: 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கட்சியும் ஆட்சியில் இருக்க முடியாது என்று கூறிய ஜோதிடரின் ஆலோசனைக்குப் பிறகு புதிய பார்லிமென்ட் கட்டிடம் கட்டப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா (யுபிடி) சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை கடுமையாக சாடினார்.

Advertisment

இது குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “டெல்லி அரசாங்கம் மூடநம்பிக்கைகளாலும், குருட்டுப் பின்பற்றுபவர்களாலும் சூழப்பட்டுள்ளது.

நாட்டை நடத்துபவர்களின் மனதில் மூடநம்பிக்கை, கிரகங்கள் மற்றும் ஜாதகங்களின் தாக்கம் உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்காது.

எனவே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு யாரும் அங்கு ஆட்சியில் இருக்க முடியாது, ஆகவே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது. இது ஜோதிடரின் ஆலோசனையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “புதிய கட்டிடம் கோமுகி (பசு முகம்) இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

ஒரு பக்கம் நமது விஞ்ஞானிகள் சந்திரனை அடைந்து விட்டார்கள்; அதே நாட்டின் தலைவர்கள் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுகிறார்கள். டெல்லியில் ஜோதிடர்களும் பாபாக்களும் ஆட்சி செய்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

New Parliament building constructed following ‘astrologer’s advice’, Sanjay Raut alleges

இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் கலந்துகொண்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தனது அனுபவத்தை ராவத் பகிர்ந்துகொண்டார்.

அதில், “நான் அங்கு சென்றபோது, ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. புதிய பார்லிமென்ட் மாளிகையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது.

அது ஒரு மல்டிபிளக்ஸ் போல இருந்தது. பழைய கட்டிடத்தில் இருக்கும் வசதிகள் புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் இல்லை” என்றார்.

தொடர்ந்து, “பழைய கட்டடம் நல்ல நிலைமையில் இருக்கும்போது புதிய கட்டடம் ரூ.20 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இது அன்னையை வயதானவள் எனக் கூறி முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது போன்றது” எனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

sanjay Raut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment