டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக 'சென்டிரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இந்த புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி, மே 28-ந்தேதி நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணித்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், இந்திய பாரம்பரியம், மற்றும் விடுதலை இயக்க பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக, அடுத்த கட்ட கலை படைப்பிற்கான திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.1,200 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கலைத் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில், இந்திய பாரம்பரியம், மற்றும் விடுதலை இயக்க பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள சுமார் 5,000 கலைப்படைப்புகளின் விரிவான தொகுப்பாக இது இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டம் மற்றும் முன்மொழிவு தயாராக இருக்கும் நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. அடுத்த கட்டமாக 8 புதிய கேலரிகள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஃபோயர்களுக்கு இடையில் சமமாக பிரிக்கும் சாப்பாட்டு அறைகளை அலங்கரிக்கும் கலைப்படைப்புகள் வைக்கப்பட்ட உள்ளன.
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA) உறுப்பினரும், செயலாளருமான சச்சிதானந்த ஜோஷி கூறுகையில், 1857 க்கு முந்தைய இந்தியாவின் "மரியாதைக்கான போராட்டத்திற்காக" அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கேலரி லோக்சபா ஃபோயரின் மேல் தரை தளத்தில்அமைக்கப்பட உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி (1857 முதல் 1947 வரை), கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய கலை மையம் இந்த திட்டத்தை செயல்படுத்தும்.
முதல் தளத்தில் இரண்டு கேலரிகள் இருக்கும். ஒன்று நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மற்றும் மற்றொன்று சுதந்திர இயக்கத்தில் பழங்குடியின தலைவர்களின் பங்கைக் காட்டுகிறது.
'ராஜ்யசபா ஃபோயரில் இரண்டு புதிய கேலரிகள் மேல் தரை தளத்தில் (இந்தியாவின் அறிவு மற்றும் பக்தி மரபுகள்) மற்றும் முதல் தளத்தில் இரண்டு (இயற்கை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுடன் இந்திய தொடர்பு) இருக்கும். கட்டிடத்தின் மற்ற சுவர்கள் ஸ்லோகங்கள் மற்றும் பிற புனித சின்னங்களால் அலங்கரிக்கப்படும்.
கலைப்படைப்பின் முதல் கட்டத்தில், இது மிகவும் விரிவானது. பிப்ரவரி 2022 இல் தங்களுக்கு இந்த திட்டம் ஒதுக்கப்பட்டது. அதை ஒரு வருடத்திற்குள் செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட சுருக்கத்தில், இந்திய நெறிமுறைகளை மனதில் வைத்து, பாரதத்தையும் பாரதியத்தையும் வெளிப்படுத்துவதே அடிப்படை யோசனை." என்று ஜோஷி கூறினார்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் மாநிலங்களும் போதுமான பிரதிநிதித்துவத்தைக் கண்டறிவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. உதாரணமாக, ஜன் ஜனனி ஜென்மபூமி என்று பெயரிடப்பட்ட சென்ட்ரல் ஃபோயரின் அலங்கரிக்கப்பட்ட சுவர், 75 பெண் கைவினைஞர்கள் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கைவினைகளை உருவாக்கியுள்ளனர். ஷில்ப் தீர்கா என்று அழைக்கப்படும் மற்றொரு கேலரியில் நாடு முழுவதிலுமிருந்து 400 கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்ட 250 க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் இருந்தன.
இந்திய மரபுகள் மற்றும் பழம்பெரும் கலைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய ஃபோயரில் உள்ள மக்களவைச் சுவரை அலங்கரிக்கும் சமுத்திர மந்தன் சுவரோவியம், மக்கள் நலனுக்கான யோசனைகள் மற்றும் எண்ணங்களைத் தூண்டுவதைக் குறிக்கிறது. ஒட்டுமொத்த கட்டிடத் திட்டத்துக்கு ரூ.1,200 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.