கோபுரங்களுடன் முக்கோண புதிய நாடாளுமன்ற கட்டிடம்; ராஷ்டிரபதி பவன் பல்லுயிர் பூங்கா

கோபுரங்களுடன் ஒரு கம்பீரமான முக்கோண மாளிகையாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து அலுவலகங்களையும் இணைக்க ஒரு பாதாளதளம், பிரதமருக்கு ஒரு புதிய இல்லம், இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சின்னம் என அமைய உள்ளது.

By: Updated: December 31, 2019, 10:55:31 PM

கோபுரங்களுடன் ஒரு கம்பீரமான முக்கோண மாளிகையாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து அலுவலகங்களையும் இணைக்க ஒரு பாதாளதளம், பிரதமருக்கு ஒரு புதிய இல்லம், இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சின்னம் என அமைய உள்ளது. இவை புது தில்லியில் உள்ள மத்திய விஸ்டாவின் மத்திய அரசின் லட்சிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மறுவடிவமைப்பு திட்டத்தின் சில அம்சங்கள் ஆகும்.

செப்டம்பர் 13 அன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பிரதமரின் கனவுத் திட்டத்தை அறிவித்தது. இதையடுத்து, கட்டிடக்கலை நிறுவனங்கள் ஏலத்தொகையை செலுத்தின.

2019 அக்டோபரில், டாக்டர் பிமல் படேல் தலைமையிலான குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட எச்.சி.பி டிசைன், பிளானிங் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஐந்து ஏலதாரர்களை வென்று இந்த திட்டத்தை கைப்பற்றியது. இந்த திட்டம் 2024க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக, செயல்படும் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகயில், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்படும் என்று கூறினார். மேலும், 1857 க்கு முன்னர் இந்தியாவின் வரலாற்றை ஒரு பகுதியிலும் 1857 முதல் இப்போது வரை மற்றொன்றிலும் காட்சிக்கு வைக்கப்படும் என்ற யோசனை உள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பாரம்பரிய கட்டமைப்புகள் எதுவும் இடிக்கப்படாது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமரின் புதிய வீடு ராஷ்டிரபதி பவனுக்கு அடுத்ததாக இருக்கும். மேலும், அது துணை ஜனாதிபதியின் இல்லமாகவும் இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த திட்டம் சென்ட்ரல் விஸ்டாவை யமுனா நதி வரை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. “இந்தியா 75 ஐ குறிக்க ஒரு சின்னத்தை உருவாக்குவோம். அதற்கான வடிவமைப்பு போட்டி இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

ராஷ்டிரபதி பவன் முதல் ரிட்ஜ் வரையிலான பகுதி “தேசிய பல்லுயிர் ஆர்போரேட்டமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.” இந்தியாவின் பல்லுயிர் தன்மையை வெளிப்படுத்தும் பூங்காவாக இருக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார்.

வடிவமைப்பின் முக்கிய கூறுகள் தேசிய ஆவணக்காப்பகங்களுக்கான விரிவாக்கம், பொது இடங்களை விரிவுபடுத்துதல் மற்றும் டெல்லியின் குடியிருப்பாளர்களுக்கும் இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதிகளை வழங்குதல் மற்றும் நீடித்த தன்மையை மேம்படுத்த ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

புதிய நாடாளுமன்றம் குறித்து, அந்த அதிகாரி கூறுகையில், “இது அதிநவீன ஒலியியல் மற்றும் மூன்று கோபுரங்களைக் கொண்ட ஒரு முக்கோண நாடாளுமன்றமாக இருக்கும். இது ஜனநாயகத்தின் உணர்வை பிரதிபலிக்கும். இந்த புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சாளரமும் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். புதிய நாடாளுமன்றத்திற்குள் 75 வது ஆண்டு அமர்வு (2022) நடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.” என்று கூறினார்.

தற்போதைய நாடாளுமன்றத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள புதிய நாடாளுமன்றத்தில் 900-1,000 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரக்கூடிய அளவிலும் தற்போதைய மத்திய மண்டபத்திற்கு பதிலாக ஒரு பொதுவான கூடம் இருக்கும். அனைத்து நாடாளுமன்றா உறுப்பினர்களுக்கான அலுவலகங்களும் இதில் அடங்கி இருக்கும்.

சாஸ்திரி பவன் மற்றும் நிர்மன் பவன் ஆகியவை குறைந்தது 10 அதிநவீன அலுவலக கட்டிடங்களுக்கு வழிவகுக்கும். ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “இப்போதைக்கு நிலத்தைப் பயன்படுத்துவது மிகவும் மோசமாக உள்ளது. பெரும்பாலான அலுவலக கட்டிடங்கள் அழுத்தப்பட்டு காலாவதியானவை. மேலும் அவை போதுமானதாகவும் இல்லை. அனைத்து புதிய கட்டிடங்களின் வெளிப்புற முகப்பும் நாடாளுமன்றம் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு ஒத்ததாக இருக்கும். ஆனால், உள்ளே எஃகு மற்றும் கண்ணாடி இருக்கும். ஒவ்வொரு அலுவலக கட்டிடத்திலும் எட்டு மாடிகள் உள்ளன. மேலும், அவை திறந்தவெளி அரங்கையும் இருக்கைகளையும் கொண்டிருக்கும்.” என்று கூறினார்.

டிசம்பர் 12, 1911 அன்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியப் பேரரசராக முடிசூட்டிக்கொண்டபோது, இந்திய அரசாங்கத்தின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து பண்டைய தலைநகரான டெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார்.

அப்போது கட்டிடக் கலைஞர்களான எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் 20 ஆண்டு கால திட்டத்தில் இறங்கினர். அவர்கள் நாடாளுமன்ற மாளிகை, ராஷ்டிரபதி பவன், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ராஜ்பாத், இந்தியா கேட், தேசிய ஆவணக் காப்பகங்களை கட்டினர். இறுதியாக புது தில்லி 1931 இல் திறக்கப்பட்டது.

“இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ச்சியான முறையில் இடிப்பு மற்றும் கட்டுமானம் நடைபெறும் … வடிவமைப்பு என்பது ஒரு மாறிக்கொண்டிருக்கும் செயல்முறையாகும். மேலும், இது அனைத்து பங்குதாரர்களின் உதவியுடன் வளப்படுத்தப்படும். அமைச்சகம் இப்போது வெவ்வேறு பங்குதாரர்களுடன் டவுன்ஹால் கூட்டங்களை நடத்துகிறது” என்று அந்த அதிகாரி கூறினார். மேலும்ம், ஒரு கட்டிடக்கலை கவுன்சிலுடனான கூட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:New parliament building with spires rashtrapati bhavan biodiversity park

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X