பொது வருங்கால வைப்பு நிதி திட்ட( PPF) பயனாளர்களா நீங்க? அதிரடி மாற்றங்களுக்கு ஏற்ப தயாராவீர்…

New PPF Account Rules: ஒரு நிதியாண்டில் ரூ.500 செலுத்திய பிறகு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் அந்த மதிப்பிலான தொகை செலுத்தப்பட வேண்டும். நடுவில் கட்ட தவறினால், பிபிஎப் கணக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.

By: Updated: December 17, 2019, 12:12:55 PM

PPF scheme 2019: பொது வருங்கால வைப்புநிதி ( Public Provident Fund ) திட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. நடைமுறையில் உள்ள விதிகள் மாற்றப்பட்டுள்ளதால், பயனாளர்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

வைப்பு நிதி கணக்குகளின் எண்ணிக்கை : பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க நினைப்பவர்கள், படிவம் -1 பூர்த்தி செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேஜர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் கணக்கு துவங்கலாம். கணக்கு துவங்குபவர், அந்த மைனருக்கு பாதுகாவலர் ( Guardian) ஆக செயல்படுவார்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் joint account என்ற நடைமுறை இல்லை.

டெபாசிட் வரைமுறை : ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தனிநபர் கணக்கு மற்றும் மைனருக்கான கணக்கு இரண்டும் சேர்த்து அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வேண்டும்.

பிபிஎப் கணக்கு நிறுத்தம் : ஒரு நிதியாண்டில் ரூ.500 செலுத்திய பிறகு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் அந்த மதிப்பிலான தொகை செலுத்தப்பட வேண்டும். நடுவில் கட்ட தவறினால், பிபிஎப் கணக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.

நிறுத்தப்பட்ட கணக்கில் இருந்து பணம் கிடைக்குமா? : திட்டத்தின் முதிர்ச்சி காலத்தின் போது எத்தனை ஆண்டுகள் பணம் கட்டப்படவில்லையோ அந்த ஆண்டுகளுக்கு ரூ.50 அபராதத்தொகை சேர்த்து கழித்து மீதித்தொகை வழங்கப்படும்.
முதிர்ச்சிக்காலத்திற்கு முன்னதாக, நிறுத்தப்பட்ட கணக்கின் தொகை எக்காரணம் கொண்டும் வழங்கப்படமாட்டாது.
நிறுத்தப்பட்ட கணக்கின் முதிர்ச்சிக்காலம் முடியாதவரை, அந்த நபர் மீண்டும் ஒரு புதிய கணக்கை துவங்க இயலாது.

வட்டி விகிதம் : ஆண்டின் இறுதியில் வட்டி, நமது கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி 7.9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

பணம் பெறும் வழிமுறை : கணக்கு துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், படிவம் – 2 பூர்த்தி செய்து, நமது கணக்கில் உள்ள பணத்தின் 50 சதவீத அளவிலான பணத்தை நாம் திரும்ப பெறலாம். அதற்கு மேல் பெற இயலாது.

முதிர்ச்சி காலத்துக்கு பிறகும் டெபாசிட் சாத்தியமா? : 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் ஆட்டோமெட்டிக் ஆக கணக்கு முதிர்ச்சியடையும். அதற்குப்பிறகும் தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்ய விரும்புபவர்கள், படிவம் 4யை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வழிமுறையை பின்பற்ற நினைப்பவர்கள் முதிர்ச்சிகாலத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் நாம் சேர்த்து வைத்துள்ள பணம், நாம் பெற்றுள்ள கடனை அடைக்கவோ அல்லது மற்ற திட்டங்களிலோ இணைக்கப்பட மாட்டாது என்று குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:New ppf rules check key public provident fund scheme 2019 features

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X