அப்பாடா..! வீட்டு உரிமையாளர்களை ‘ரிலாக்ஸ்’ செய்யும் புதிய வாடகைக் கொள்கை
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் நில உரிமைதாரர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும் வகையில் புதிய வாடகை கொள்கையை உருவாக்கி வருவதாகவும் அது பழைய முறையில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் நில உரிமைதாரர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும் வகையில் புதிய வாடகை கொள்கையை உருவாக்கி வருவதாகவும் அது பழைய முறையில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மிக விரைவில் நீங்கள் ஒரு வாடகை கொள்கை வெளிவருவதை பார்ப்பீர்கள் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை இணை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பலவீனமான சட்ட அமைப்பு மற்றும் உங்கள் சொத்து உங்களுக்கு திரும்ப கிடைக்க பெறாமல் போகுமோ என்ற பயத்தின் காரணமாக ஒரு நல்ல எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விட பயப்படுகின்றனர், என அவர் மேலும் தெரிவித்தார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் வரம்புக்குள் வரும் இந்த கொள்கை, அதிகமான மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதால் அவர்கள் தங்கள் சொத்துகளை ஒத்திக்கு விட முன்வருவர். இதனால் நகர்புறத்தில் உள்ள வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையையும் ஒழியும்.
பல மில்லியன் வீடுகள் நாடு முழுவதும் காலியாக உள்ளன. புதிய வாடகை கொள்கை வீட்டு உரிமையாளர்களின் கவலைகளை களையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வாடகை கொள்கையில் மாநிலங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவர முடியும், என மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2022 க்குள் அனைவருக்கும் குறைந்த விலையில் வீடுகள் என்ற இலக்கை ஏற்கனவே நிர்ணயித்திருந்தது. இதற்கிடையில் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்த ஒரு அறிவிப்பும் வீடு மற்றும் வீட்டு மனை தொழிலுக்கு ஒரு நிதி உந்துதலை கொடுக்கப்போகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil