கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. எதிரிகளின் கூடாரத்தை இந்திய ராணுவம் தகர்த்தெறியும் பரபரப்பு காட்சிகள் மிரள வைத்துள்ளன.
இரண்டு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கும் போது,எதிர் நாடு ராணுவத்திற்கு தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் நாட்டின் எல்லையிலேயே சென்று தாக்குதல் நடத்துவதற்கு பெயர்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.இந்தியா மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலேயே பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளது. இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்ற பின் கடந்த 2016ல் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. செப்டம்பர் 26 தேதி 2016 அதிகாலை இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் புதிய வீடியோ :
கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் தாக்குதல் நடத்திய போது 160 ஆக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பிறகு 190 என்று பெருகி தற்போது 230 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது அதிர்ச்சி அளிக்கும் மற்றொரு தகவல் ஆகும்.
பெரும்பாலும் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரவு நேரத்தில்தான் நடத்தப்படும். இல்லையென்றால் அதிகாலையில் நடத்துவார்கள்.
சென்ற மாதம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான முதல் ஆதாரம் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதற்கான காரணம், தாக்குதல் நடந்த விதம், எதிரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அனைத்து விவரம் குறித்தும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த்க முறை வெளியான வீடியோவில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 7 பதுங்குக் குழிகளை இந்திய ராணுவம் அழித்த போது எடுக்கப்பட்டது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆளில்லா விமானம் மற்றும் ‘தெர்மல் இமேஜிங், கேமராக்களால் இவ்வீடியோக்கள் எடுக்கப்பட்டு ராணுவ தலைமைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.மேலும் வரும் 29ம் தேதி, மாணவர்கள் அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தினை கொண்டாட வேண்டும் என்றும், இந்திய ராணுவ வீரர்களுக்கு தங்களின் ஆதரவினை தரும் விதமாக உறுதிமொழி மற்றும் கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு இந்தியாவில் இருக்கும் அனைத்து பல்கலைகழகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
செப்டம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கொண்டாட்டட்தை டெல்லியில் உள்ள இந்திய கேட்வில் துவக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 51 நகரங்களில் உள்ள 53 இடங்களில் இதேபோன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. "குறிப்பாக இந்திய ஆயுதப்படைகள் மற்றும் சிறப்புப்படைகளின் ஆயுதங்கள் கண்காட்சியில் வைப்பது போல் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார்.