2019 ஆங்கிலப் புத்தாண்டு : மக்களுக்கு வாழ்த்துகள் கூறிய தலைவர்கள் மற்றும் திரையுலகினர்

அனைவருடைய கனவுகளும் 2019ம் ஆண்டில் நிறைவேறட்டும் - பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடைய கனவுகளும் 2019ம் ஆண்டில் நிறைவேறட்டும் - பிரதமர் நரேந்திர மோடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Year 2019, leaders wishes on New year

New Year 2019

New Year 2019 : இன்று உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இசை, விருந்து, சுற்றுலா என தங்களுக்கு பிடித்த செயல்களில் மக்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இந்நேரத்தில் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு வழங்கி, தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டும், மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்தும் வருகின்றார்கள்.

New Year 2019 : மோடியின் வாழ்த்து செய்தி :

Advertisment

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். அனைவருடைய கனவுகளும் 2019ம் ஆண்டில் நிறைவேறட்டும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துகள்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ், மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் உள்ளிட்டோர் தங்களின் வாழ்த்து செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு தலைவர்களின் வாழ்த்துகள்

Advertisment
Advertisements

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமிழக மக்களுக்கு எழுச்சியும், வளர்ச்சியும் கொண்ட ஆண்டாக இது அமைய வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுக சார்பிலும் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறப்பட்டது.

மு.க ஸ்டாலின் வாழ்த்து செய்திகள்

எங்கும் இன்பம் தரும் எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும். அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்

புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாக இந்த வருடம் அமையும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர் அக்கட்சியினர்.

கலையுலகினரின் வாழ்த்துகள் :

தலைவர்களைத் தொடர்ந்து திரைப்பட துறையினர் தங்களின் வாழ்த்து செய்திகளை பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா

பாடலாசிரியர் வைரமுத்து

தனுஷ்

தன்னுடைய இரண்டு படங்களை வெற்றி அடைய வைத்ததிற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

நயன்தாரா

ஜனவரியில் வெளியாக இருக்கும் கொலையுதிர்காலம் திரைப்படத்தின் போஸ்ட்ருடன் வாழ்த்துகள் கூறியிருக்கிறார் நடிகை நயன்தாரா.

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: