Margaret Alva, Karnataka’s once-powerful Delhi face who retreated into shadows, now Opposition’s V-P pick: இந்த ஆண்டின் தொடக்கத்தில், காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியான மார்கரெட் ஆல்வா (80), பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் மத மாற்றம் தொடர்பான சட்டத்தைக் கொண்டுவரும் கர்நாடக பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
“கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒழுக்கமான, வன்முறையற்ற, சேவை சார்ந்த சமூகம். நாங்கள் வெகுஜன மதமாற்றங்களில் ஈடுபட்டிருந்தால், எங்களது எண்ணிக்கை ஏன் மூன்று சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது? கிறிஸ்தவ காலனித்துவ சக்திகளின் 200 ஆண்டுகால ஆட்சியும், ‘கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட மிஷனரிகள்’ என்று அழைக்கப்படுபவர்களின் பணியும் மதமாற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் அது குறைந்துக்கொண்டே வருகிறது. எங்கள் மீது ஏன் இந்த பொய் பிரச்சாரமும் வன்முறையும்?” என்று மார்கரெட் ஆல்வா எழுதினார்.
இதையும் படியுங்கள்: ம.பி உள்ளாட்சித் தேர்தல்: 80% வெற்றி குவித்த பா.ஜ.க; பறிபோன 4 மாநகராட்சிகள்
பிரதமருக்கு எழுதிய கடிதம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற மார்கரெட் ஆல்வா, கர்நாடகாவில் ஒரு காலத்தில் முக்கியமான அரசியல் சக்தியாக இருந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநில அரசியல் அரங்கிற்கு மீண்டும் திரும்பினார். இப்போது துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் ‘ஒருமித்த’ வேட்பாளரான மார்கரெட் ஆல்வா மீண்டும் ஒருமுறை கவனத்தை ஈர்த்துள்ளார்.
கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் இருந்து வந்தாலும் மற்றும் 1999 இல் தற்போதைய உத்தர கன்னடா (அப்போது கனரா என அழைக்கப்படும்) மக்களவைத் தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், மார்கரெட் ஆல்வா பெரும்பாலும் தேசிய அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டார்.
ஒரு வழக்கறிஞரான மார்கரெட் ஆல்வா, 32 வயதில் ராஜ்யசபாவில் நுழைந்தார் மற்றும் 1974 முதல் நான்கு முறை மற்றும் 24 ஆண்டுகள் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார்.
மார்கரெட் ஆல்வா இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி வி நரசிம்ம ராவ் ஆகியோரின் கீழ் பல காங்கிரஸ் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்துள்ளார். ராஜீவ் காந்தி காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார்.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், காங்கிரஸ் தலைமையுடனான அவரது தொடர்பு, முதல்வர் பதவிக்கான போட்டியில் மார்கரெட் ஆல்வா இருப்பதாக கட்சியின் கர்நாடக பிரிவில் ஊகங்கள் இருந்தது.
மார்கரெட் ஆல்வாவுக்கு வலுவான அரசியல் பின்னணி உள்ளது. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அவரது மறைந்த கணவர் நிரஞ்சன் தாமஸ் ஆல்வாவின் பெற்றோர் பாராளுமன்றத்தில் நுழைந்த முதல் எம்.பி.,க்கள் ஜோடியாக இருந்தனர்.
“எனது மாமனார் - மாமியார், மறைந்த ஜோகிம் மற்றும் வயலட் ஆல்வா, சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்திற்காக சிறைக்குச் சென்று, நாடாளுமன்றத்தில் முதல் எம்.பி.,க்கள் ஜோடியாக ஆனார்கள். எனது மாமியார் பாராளுமன்றத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாகவும் ஆனார், ”என்று ஆல்வா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எழுதினார்.
மார்கரெட் ஆல்வாவின் மாமனார் ஜோகிம் ஆல்வா 1952 முதல் 1967 வரை மூன்று முறை மற்றும் 15 ஆண்டுகள் காங்கிரஸ் எம்.பி.யாக மக்களவையில் கனரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது கணவர் நிரஞ்சன், வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர் 2018 இல் இறந்தார்.
2008 ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பிரிவு தகுதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக அதிக ஏலதாரர்களுக்குத் தேர்தல் டிக்கெட்டுகளை விற்பதாக மார்கரெட் ஆல்வா கூறியதைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடனான உறவில் ஒரு குறுகிய கால பிரிவில் இருந்தார். உத்தரகாண்ட் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் அவர் ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவாவில் ஆளுநராக பொறுப்பேற்றார். அவரது மகன் நிவேதித் ஆல்வா மாநில சட்டமன்றத்தில் நுழைவதற்காக உத்தர கன்னடா பகுதியில் போட்டியிட பல ஆண்டுகளாக ஆர்வமாக இருந்து வருகிறார். இவரது மகன்களில் ஒருவரான நிரேட் ஆல்வா பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளராக உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.