Advertisment

பிரதமர் பாதுகாப்பு வாகனங்கள் பதிவை நீட்டிக்க கோரிய எஸ்.பி.ஜி: சுப்ரீம் கோர்ட் உத்தரவை காட்டி நிராகரித்த பசுமை தீர்ப்பாயம்

மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழு (எஸ்.பி.ஜி), பிரதமர் பாதுகாப்பு வாகனங்களின் பதிவை நீட்டிக்க கோரிய நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்.ஜி.டி) நிராகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
NGT rejects SPG plea to extend life of 3 Prime Minister vehicles Citing upreme Court order Tamil News

மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழு (எஸ்.பி.ஜி), மே 2023 இல், தனது மூன்று வாகனங்களின் பதிவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு டெல்லி போக்குவரத்துத் துறையிடம் கேட்டுக் கொண்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

National Green Tribunal | Pm Modi: பிரதமர் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படும், டீசலில் இயங்கும் 3 சிறப்பு கவச வாகனங்களின் பதிவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழு (எஸ்.பி.ஜி) தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் (என்.ஜி.டி) கோரிக்கை வைத்தது நிலையில், அந்த கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Citing law, NGT rejects SPG plea to extend life of 3 Prime Minister’s vehicles

வேண்டுகோள் 

பிரதமர் பாதுகாப்பிற்காக மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழு (எஸ்.பி.ஜி) 3 ரெனால்ட் எம்.டி-5 சிறப்பு கவச வாகனங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த வாகனங்கள் 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 2014 டிசம்பரில் பதிவு செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் முறையே இந்த 3 வாகனங்களும் சுமார் 6,000 கிமீ, 9,500 கிமீ மற்றும் 15,000 கிமீ மட்டுமே பயணித்துள்ளன. 

தலைநகர் டெல்லியில் (என்.சி டி), 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் இயக்க தடை விதித்து 2018 அக்டோபரில்  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழு தனது 3 வாகனங்களை இயக்க டிசம்பர் 2029 வரை 15 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் 2018 உத்தரவுக்கு இணங்க, இந்த வாகனங்களின் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததும் டிசம்பர் 2024 இல் பதிவு நீக்கப்படும். 

இதனையடுத்து, மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழு (எஸ்.பி.ஜி), மே 2023 இல், தனது மூன்று வாகனங்களின் பதிவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு டெல்லி போக்குவரத்துத் துறையிடம் கேட்டுக் கொண்டது. ஆனால், டெல்லி போக்குவரத்துத் துறை  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி அனுமதி கொடுக்க முடியாது என்று ஜூன் 6 ஆம் தேதி 2023 அன்று மறுத்து விட்டது. 

இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.ஜி அதன் சிறப்புக் கவச வாகனங்களின் (03 எண்கள்) பதிவுக் காலத்தை நீட்டிக்க அனுமதிக்குமாறு, டெல்லி போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் வேண்டுகோள் வைத்தது. அந்த கோரிக்கை மனுவில், இந்த வாகனங்கள் சிறப்பு பாதுகாப்பு படை குழுவின் தொழில்நுட்ப தளவாடங்களுக்கு இன்றியமையாதது என்றும், அதனால், சிறப்பு வாகனங்களின் (03 எண்கள்) பதிவுக் காலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு  (23/12/2029 வரை) நீட்டிக்க அனுமதிக்கவும் வேண்டியது. 

மேலும், இந்த 3 வாகனங்கள், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு விவரக்குறிப்புகள் ஆகியவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை மற்றும் அவை தேவைகளை பூர்த்தி செய்ய சந்தையில் எளிதில் கிடைக்காது என்றும் குறிப்பிட்டது. 

நிராகரிப்பு 

இந்நிலையில், எஸ்.பி.ஜி-யின் இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா மற்றும் நிபுணர் உறுப்பினர் டாக்டர் ஏ. செந்தில் வேல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் 2018 உத்தரவுக்கு எதிராக செயல்பட முடியாது என்று கோரிக்கை நிராகரிக்கத்தது. 

இது தொடர்பாக மார்ச் 22 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில், “இந்த மூன்று வாகனங்களும் பொதுவாகக் கிடைக்காத சிறப்பு நோக்க வாகனங்கள் என்பதையும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த வாகனங்கள் மிகக் குறைவாகவே இயங்கியுள்ளன என்பதையும், பிரதமரின் குறிப்பிட்ட பாதுகாப்பிற்காகத் தேவைப்படுவதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். 29.10.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அனுமதி வழங்க முடியாது. அதன்படி கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அரசின் அறிவிப்பு எல்லோருக்கும் பொதுவானது என்றும், எஸ்.பி.ஜி-யின் வாகனங்கள், பழையதாக இருப்பதால், மோட்டார் வாகனங்களுக்கான பழைய உமிழ்வு விதிமுறைகளான பாரத் ஸ்டேஜ் III உடன் மட்டுமே இணங்குவதாகவும் அந்த உத்தரவில் தெரிவித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் 2018 உத்தரவுக்கு முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே ஏப்ரல் 2015 இல் ஒரு உத்தரவை நிறைவேற்றியது, 10 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து டீசல் வாகனங்களும் டெல்லி என்.சி.ஆர் சாலைகளில் ஓடுவதற்கு தடை விதித்தது. 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது. டெல்லி என்.சி.ஆர் பகுதியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக தேசிய பசுமை தீர்ப்பாயம்  மற்றும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pm Modi National Green Tribunal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment